பக்கம் எண் :

 136. திருத்தருமபுரம்1249


1466. தூவண நீறகலம் பொலி யவ்விரை புல்கமல்

குமென் மலர் வரை புரை திரள்புயம் மணிவர்

கோவண மும்முழையின் னத ளும்முடை யாடையர்

கொலைம் மலி படை யொர்சூ லமேந்திய குழகர்

பாவண மாவலறத் தலை பத்துடை யவ்வரக்

கனவ் வலி யொர்கவ் வைசெய் தருள்புரி தலைவர்

தாவண வேறுடையெம் மடி கட்கிடம் வன்றடங்

கடல் லிடுந் தடங் கரைத் தருமபு ரம்பதியே. 8

1467. வார்மலி மென்முலைமா தொரு பாகம தாகுவர்

வளங் கிளர் மதி யர வம்வைகிய சடையர்

கூர்மலி சூலமும்வெண் மழு வும்மவர் வெல்படை

குனி சிலைதனிம் மலை யதேந்திய குழகர்

_________________________________________________

8. பொ-ரை: தூய வெண்ணிறம் பொருந்திய திருநீறு மார்பின் கண் விளங்க, மலை போலத் திரண்ட தோள்களில் மணம் நிறைந்து செறிந்த மென்மையான மலர்மாலையை அணிவர். கோவணத்தையும் மான் தோலையும் ஆடைகளாக உடையவர். கொல்லும் தொழிலில் வல்ல ஆயுதமாக ஓர் சூலத்தை ஏந்திய இளையர். பத்துத் தலைகளை உடைய அரக்கனாகிய இராவணன், பாடல்கள் பாடி அலறுமாறு அவனது வலிமையைச் செற்றுப் பின் அருள் புரிந்த தலைவர். தாவிச் செல்லும் இயல்புடைய ஆனேற்றைத் தம் ஊர்தியாகக் கொண்டவர். அவ்அடிகட்கு இடம், வலிய பெரிய கடலின் அலைகள் சேர்ந்த பெரிய மணற்கரையில் விளங்கும் தருமபுரம் என்னும் பதியாகும்.

கு-ரை: வெண்ணிறத் திருநீறு மார்பில் விளங்க, மணம் பொருந்திய மலரைப் புயத்து அணிவர்; கோவணமும், மான் தோலும் உடுப்பவர்; சூலமேந்திய இளையர்; இராவணற்குத் துன்பஞ் செய்து, பின் அருளும்செய் தலைவர்; தாவும் நிறம் பொருந்திய இடபத்தையுடைய எம்மடிகட்கு இடம் தருமபுரம் என்கின்றது. அகலம் - மார்பு, உழை - மான். அதள் - தோல். அரக்கன் வலி ஓர் கவ்வை செய்து (அவன்) பாவண்ணமா அலற அருள்புரி தலைவர் எனக்கூட்டுக. பாவண்ணமா - சாமகீதமாக. கவ்வை - துன்பம். தா வண்ண ஏறு - தாவிச்செல்லும் நிறம் பொருந்திய இடபம்.

9. பொ-ரை: கச்சணிந்த மென்மையான தனங்களை உடைய உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டவர். பிறைமதி, பாம்பு