பக்கம் எண் :

1248திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


1465. தேமரு வார்குழலன் னந டைப்பெடை மான்விழித்

திருந் திழை பொருந் துமே னிசெங்கதிர் விரியத்

தூமரு செஞ்சடையிற் றுதை வெண்மதி துன்றுகொன்

றைதொல்புனல் சிரங் கரந் துரித்ததோ லுடையர்

காமரு தண்கழிநீ டிய கானல கண்டகங்

கடல் லடை கழி யிழி யமுண்டகத் தயலே

தாமரை சேர்குவளைப் படு கிற்கழு நீர்மலர்

வெறி கமழ் செறிவ் வயற் றருமபு ரம்பதியே. 7

எள்கிட - இகழ. நற - மணம். ஞாழல் - புலிநகக் கொன்றை. அள்ளல் - சேறு.

7. பொ-ரை: இனிமையும், மணமும் பொருந்திய நீண்ட கூந்தல், அன்னம் போன்ற நடை, பெண்மான் போன்ற விழி இவற்றை உடையவளும் திருத்தம் பெற்ற அணிகலன்கள் பூண்டவளும் ஆகிய உமையம்மை ஒருபாலாகப் பொருந்திய மேனியனும், செவ்வொளி விரியும் தூய செஞ்சடையில் வெண்மையான பிறைமதி, நிறைந்த கொன்றை மலர், பழமையான கங்கை நீர், தலைமாலை ஆகியவற்றை மறைத்துச் சூடி, உரித்து உடுத்த தோல்களை உடையாகக் கொண்டவனும் ஆகிய இறைவனது பதி அழகிய குளிர்ந்த உப்பங்கழிகளை அடுத்துள்ள கடற்கரைச் சோலைகளில் தாழை மரங்களும், கடலினிடத்திருந்து பெருகிவரும் உப்பங்கழிகளிடத்து நீர்முள்ளிகளும், நீர் நிலைகளில் தாமரை, குவளை, செங்கழுநீர் ஆகியவற்றின் மலர்களும் மணம் வீசுவதும், வயல்கள் செறிந்ததுமாகிய தருமபுரமாகும்.

கு-ரை: உமையுடன்கூடிய மேனி ஒளி விரிய, செஞ்சடையில் மதி கொன்றை கங்கை சிரம் இவற்றை மறைத்து, தோலையுடுத்தவரான இறைவன் பதி தருமபுரம் என்கின்றது.

தேமரு - மணம் பொருந்திய, குழலையும், நடையையும், விழியையும் உடைய திருந்திழை என்க.

துதை - செறிந்த. கரந்து - மறைய அணிந்து. கானல கண்டகம் - கடற்கரைச் சோலையிலுள்ள தாழை. முண்டகம் - கடல் முள்ளி. படுகு - மடு.