1464. கூழையங் கோதைகுலா யவ டம்பிணை புல்கமல்
குமென்முலைப் பொறி கொள்பொற் கொடியிடைத்
துவர்வாய்
மாழையொண் கண்மடவா ளையொர் பாகம
கிழ்ந்தவர்
வலம் மலிபடை விடை கொடிகொடும் மழுவ்வாள்
யாழையும் மெள்கிடவே ழிசை வண்டுமு ரன்றினந்
துவன் றிமென் சிறஃகறை யுறந்நறவ்வி ரியுந்நல்
தாழையு ஞாழலுந்நீ டிய கானலி னள்ளலி
சைபுள்ளினந் துயில் பயி றருமபு ரம்பதியே. 6
_________________________________________________
கு-ரை: அவருக்கு ஒப்பு ஆராயப்புகில் யாரும் இல்லை.
கங்கை புகுந்தும் இடம்படும் சடையையுடையவர்.
அவர்க்குப் பேரும் ஆயிரம். பிறப்பு இறப்பு
இல்லாதவர். இவரது மாறுபட்ட பகைவரைக் கொல்லும்
வெற்றியை அறிவார் யார்? அவர்க்கு ஆரம் பாம்பு.
அழகுற எழுந்த கொழுமலராகிய கொன்றையே மாலை.
மனைவி மலை மகள். வாகனம் இடபம். தருமபுரம் பதி
என்கின்றது. நேர் - ஒப்பு. இதழி - கொன்றை.
அலங்கல் - மாலை. தாரம் - மனைவி. கடி - மணம்.
6. பொ-ரை: மலர்மாலை சூடிய
கூந்தலையும், தன் கணவரால் தழுவப்பெறும் மெல்லிய
தனங்களையும், தேமல்களோடு கூடிய மேனியினையும்,
கொடி போன்ற இடையையும், பவளம் போன்ற வாயையும்,
மாவடு போன்ற ஒளி விளங்கும் கண்களையும் உடைய
உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டு
மகிழ்ந்தவரும், வெற்றியைத் தரும் படைக்கலனாக
மழுவாளைக் கொண்டவரும் விடையைக் கொடியாகக்
கொண்டவரும் ஆகிய சிவபிரான் உறையும் பதி,
யாழிசையையும் வெல்லுமாறு வண்டுகள் ஏழிசை முரன்று
மெல்லிய சிறகுகளால் ஒலித்துச் சூழும்
தேன்நிறைந்த நல்ல தாழை மரங்களும், புலிநகக்
கொன்றையும் நிறைந்த கடற்கரைச் சோலைகளிலுள்ள
சேற்று நிலங்களில் இசைபாடும் பறவையினங்கள்
துயில்கொள்ளும் தலமாகிய தருமபுரமாகும்.
கு-ரை: உமையாளை ஓர் பாகம்
மகிழ்ந்தவர்; அவர்க்குப் படைமழுவும் வாளும்; கொடி
விடை; பதி தருமபுரம் என்கின்றது.
கூழை - கூந்தல். துவர் வாய் -
சிவந்தவாய். மாழை - மாவடு, படை கொடு மழு வாள்
எனவும் விடை கொடி எனவும் இயைக்க.
|