பக்கம் எண் :

1246திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


1463. நேரும வர்க்குணரப் புகி லில்லைநெ டுஞ்சடைக்

கடும் புனல் படர்ந் திடம் படுவ்வதொர் நிலையர்

பேரும வர்க்கெனையா யிர முன்னைப்பி றப்பிறப்

பிலா தவ ருடற் றடர்த் தபெற்றியா ரறிவார்

ஆரம வர்க்கழல்வா யதொர் நாகம ழஃகுறவ்

வெழுஃகொழும் மலர் கொள்பொன் னிதழிநல் லலங்கல்

தாரம வர்க்கிமவான் மக ளூர்வது போர்விடை

கடிபடு செடி பொழிற் றருமபு ரம்பதியே. 5

______________________________________________

விடையைக் கொடியாகக் கொண்டவரும், அச்சந்தரும் சுடுகாட்டைத் தமக்குரிய இடமாகக் கொண்டவரும், மண்ணுலகத்தினர், விண்ணுலகத்தினர்களால் போற்றப்படுபவரும், அவமானம் எனக் கருதாது அழிந்துபட்ட தலையோட்டில் பலிகொள்பவரும், பாம்பை மாலையாக அணிந்தவரும் ஆகிய சிவபிரானார் எழுந்தருளிய பதி. மகரந்தங்களை உதிர்க்கும் மலர்கள் நிறைந்த, தழைகள் செறிந்த, மேகங்கள் தவழும் பொழில்கள் சூழ்ந்த திருத்தருமபுரம் என்னும் நகரமாகும்.

கு-ரை: பெண்ணொடு ஆடுவர், பிறை விளங்கு சடையர். கொன்றைமாலை அணிந்தவர். விடைக்கொடி யேந்தி இடுகாட்டைப் பதியாகக்கொண்டவர். விண்ணும் மண்ணும் துதிக்கப்படுபவர். மண்டையோட்டில் பிச்சையேற்றலை அவமானமாகக் கருதாதவர். இவர் பதி தருமபுரம் என்கின்றது. வார் - கச்சு. பதி - இடம். பரிபவம் - அவமானம்.

5. பொ-ரை: ஆராயுமிடத்து அவருக்கு உவமையாகச் சொல்லத்தக்கவர் யாரும் இல்லை. கடிதாக வந்த கங்கைக்குத் தம் நீண்ட சடையை இடமாகக் கொடுத்த நிலையினர் அவர். அவருக்குப் பெயர்களோ பல ஆயிரம். முன்தொட்டு அவருக்குப் பிறப்பு இறப்பு இல்லை. தம்மை எதிர்த்தவர்களோடு சினந்து அவர்களைக் கொன்ற அவரது பெருவலியை யார் அறிவார்? தீயின் தன்மையுடைய நஞ்சினைக் கொண்ட நாகம் அவருக்கு ஆரம். செழுமையான பொன்போன்ற கொன்றை மலர், அவருக்கு மாலையாகும். இமவான் மகளாகிய பார்வதி அவருக்கு மனைவி. அவர் ஊர்ந்து செல்வது போர்ப் பயிற்சி உடைய இடபம். அவர் தங்கியுள்ள இடம் மணம் பொருந்திய ஒளிகளையுடைய பொழில்களால் சூழப்பட்ட தருமபுரம் என்னும் பதியாகும்.