பெண்ணுற நின்றவர்தம் முரு வம்மயன் மாறொழவ்
வரி வையைப் பிணைந் திணைந் தணைந்ததும்
பிரியார்
தண்ணிதழ் முல்லையொடெண் ணிதழ் மௌவன்ம
ருங்கலர்
கருங் கழிந் நெருங் குநற் றருமபு ரம்பதியே. 3
1462. வாருறு மென்முலைநன் னுத லேழையொ டாடுவர்
வளங் கிளர் விளங் குதிங் கள்வைகிய சடையர்
காருற நின்றலரும் மலர்க் கொன்றையங்
கண்ணியர்
கடுவ் விடை கொடி வெடி கொள்காடுறை பதியர்
பாருற விண்ணுலகம் பர வப்படு வோரவர்
படு தலைப் பலி கொளல் பரிபவந் நினையார்
தாருறு நல்லரவம் மலர் துன்னிய தாதுதிர்
தழை பொழின் மழைந் நுழை தருமபு ரம்பதியே. 4.
______________________________________________
ஒளிதரும் தோடு விளங்கக் கண்ணைக்
கவரும் ஒளிதரும் பிறைமதியாகிய கண்ணியை முடியிற்
சூடியவரும், முடை நாறும் தலையோட்டை உண்கலனாகக்
கொண்டவரும், உமையம்மையைக் கூடிப் பிணைந்து
இணைந்து அணைத்துத் தம் திருமேனியில் ஒரு
பாதியாகக் கொண்டவரும், தமது உருவத்தை அயனும்
மாலும் தொழ நின்றவருமாகிய சிவபிரானாரது இடம்,
குளிர்ந்த இதழ்களையுடைய முல்லை மலர்களோடு எட்டு
இதழ்களையுடைய காட்டு மல்லிகை மலர்கள் மலர்ந்து
மணம் வீசுவதும், கரிய உப்பங்கழிகள்
நிறைந்ததுமாகிய திருத்தருமபுரம் என்னும்
நன்னகராகும்.
கு-ரை: விண்ணளாவிய மலைபோன்ற
விடையை ஊர்தியாக ஏறுவர்; கங்கையைச் சூடுவர்;
தோடு விளங்க, பிறைக்கண்ணி சூடுவர்;
பிரமகபாலத்தை உண்கலனாகக் கொண்டு, பெண்
பாதியாக நின்றவர்; தம் வடிவத்தை அயனும் மாலும்
தொழ நின்றவர். இவர் பதி தருமபுரம் என்கின்றது.
மால்வரை - பெரிய மலை. கண்ணியர் -
தலைமாலையையுடையவர். கழிந்தவர் - இறந்தவர்.
மௌவல் - மல்லிகை. மல்லிகைக்கு எட்டிதழ் உண்மை
உணர்த்தப் பெறுகின்றது.
4. பொ-ரை: கச்சணிந்த மென்மையான
தனங்களையுடைய உமையம்மையோடு கூடி நடனம் ஆடுபவரும்,
உலகிற்கு வளம் சேர்க்கும் நிலவொளியைத் தரும்
மதி சூடிய சடையினரும், கார்காலத்தே மலரும்
கொன்றை மாலையைச் சூடியவரும், விரைந்து செல்லும்
|