பக்கம் எண் :

1244திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


1460. பொங்குந டைப்புகலில் விடை யாமவ ரூர்திவெண்

பொடி யணிதடங் கொண்மார் புபூணநூல் புரள

மங்குலி டைத்தவழும் மதி சூடுவ ராடுவர்

வளங் கிளர் புனலர வம்வைகிய சடையர்

சங்குக டற்றிரையா லுதை யுண்டுச ரிந்திரிந்

தொசிந் தசைந்திசைந் துசே ரும்வெண்மணற் குவைமேல்

தங்குக திர்ம்மணிநித் தில மெல்லிரு ளொல்கநின்

றிலங் கொளிந் நலங் கெழிற் றருமபு ரம்பதியே. 2

1461. விண்ணுறு மால்வரைபோல் விடை யேறுவ ராறுசூ

டுவர் விரி சுரியொளி கொடோடுநின் றிலங்கக்

கண்ணுற நின்றொளிருங் கதிர் வெண்மதிக் கண்ணியர்

கழிந் தவ ரிழிந் திடும் முடைதலை கலனாப்

_________________________________________________

2. பொ-ரை: சினம் பொங்கிய நடையினை உடையதாய், உவமை சொல்லுதற்கு வேறொன்று இல்லாததாய் விளங்கும் விடையை ஊர்தியாகக் கொண்டவரும், திருநீறு அணிந்த அகன்ற மார்பின்கண் பூணூல் புரள வானத்தில் தவழும் பிறைமதியைச் சூடி ஆடுபவரும், வளமைகளைத் தருவதாகிய கங்கை, அரவம் ஆகியன தங்கிய சடையினருமாகிய சிவபிரானாரது இடம், கடல் அலைகளால் அலைக்கப் பெற்ற சங்குகள் சரிந்து இரிந்து, ஒசிந்து, அசைந்து, இசைந்து வெண்மணற் குவியலின் மேல் ஏறித் தங்கி ஈனும் ஒளி பொருந்திய முத்துமணிகளால் மெல்லிய இருள் விலகி ஒளி சிறந்து தோன்றும் அழகிய திருத்தருமபுரமாகிய நகரமாகும்.

கு-ரை: ஊர்தி விடையாம் நீறணிந்தமார்பில் பூணுநூல் புரள மதிசூடுவர், ஆடுவர், கங்கையும் அரவும் தங்கிய சடையர் பதி தருமபுரம் என்கின்றது. பொங்கிய நடையோடு, வேறு அடைக்கலத் தானமில்லாத விடையாம் அவர் வாகனம் என்பதாம். மங்குல் - ஆகாயம். சங்கு கடல் அலையால் மோதப்பெற்று மணற் குவியல்மேல் தங்கியதால் ‘ஈனப்பெற்ற முத்துக்கள் இருளோட்டி விளங்கும் நலங்கெழுமும் தருமபுரம்‘ என்க. சங்கு சரிந்து இரிந்து ஒசிந்து அசைந்து இசைந்து சேரும் மணல் எனக்கூட்டுக. இது மணல்மேட்டின்மேல் சங்கு ஏறிய அருமைப்பாட்டை அறிவிக்கின்றது.

3. பொ-ரை: வானளாவிய பெரிய மலை போன்ற விடையின் மேல் ஏறி வருபவரும், கங்கையை அணிந்தவரும், விரிந்து சுருண்டு