சென்று
கிழக்கேசென்றால் இத்தலத்தை அடையலாம்.
இராமன் பூசித்துப் பேறுபெற்றனராதலின் இப்பெயர்
எய்தியது.
இறைவன் பெயர்
இராமநாதர். இறைவியின் பெயர் சரிவார்க்
குழலி. தீர்த்தம் இராமதீர்த்தம்.
கல்வெட்டு:
இத்தலம்
திருக்கண்ணபுரம் கல்வெட்டுக்களிற்சேர்த்தே
அரசியலாரால் படியெடுக்கப்பெற்றுள்ளது. ஐந்து
கல்வெட்டுக்கள் உள்ளன. இறைவன்
இராமனதீச்சரமுடையார் என வழங்கப்பெறுவர். குலோத்துங்கசோழன்
இக்கோயில்
பூசைக்காகவும், அமுதுபடிக்காகவும் நிலம்
அளித்தான். இந்நிலம் பின்னர்
சிவபாதசேகரமங்கலம் என்று வழங்கப்பெற்றது.
கோயிலைத் திருப்பணிசெய்தவனும் இவனே1.
பின்னர், திருமலைதேவமகாராயரின் (சகம் 1397)
விக்ரமாதித்தன் என்னும் அரசகாரியம்
பார்ப்பவன் கோயிலைப் பழுதுபார்த்திருக்கிறான்.
பூசைக்கும், அமுதுக்கும் நிலம்
அளித்திருக்கின்றான்2. கோனேரின்மை
கண்டான் (யார் என்று அறியக்கூடவில்லை)
காலத்தில் அருச்சகருக்குள் உரிமைப்போர்
நிகழ்ந்திருக்கின்றது. அதனை நீக்கி,
திருமன்னுசோழ பிரமராயனுக்கும் மானவரையனுக்கும்
பூசை உரிமைகள் வழங்கப்பெற்றன3. தனியூரான
தில்லையிலிருந்த மாகேசுவரர்களால் இக்கோயில்
நிலம் பஞ்சத்தால் விளையாதுபோக,
இராஜராஜபாண்டிமண்டலம், வீரசோழமண்டலம்,
நடுவில்நாடு, ஜெயங்கொண்டசோழமண்டலம்
முதலியவற்றில் உள்ள கோயில்களிலிருந்து
நெல்லும் பொன்னும் கொடுத்துதவும்படி
உத்தரவிட்டிருக்கின்றனர். இது கோயில்
நிர்வாகத்தின் தனிச்சிறப்பைக் குறிப்பதாகும்4.
81. திருக்கள்ளில்
தொண்டைநாட்டுத்
தலம். சென்னை - வெங்கலூர் பேருந்து வழியில்
உள்ளது. திருக்கள்ளம் எனப்பெயர் பெறும்.
பிருகு முனிவர் பூசித்துப் பேறு பெற்றார்.
சுவாமியின் பெயர்
சிவாநந்தர். அம்மையின் பெயர் ஆனந்தவல்லி.
தீர்த்தம் ஸ்ரீ நந்நி தீர்த்தம்.
_________
1 533 of 1922, 2 534.
3 536, 4 537 of 1922.
|