யாலும் பெருமானை
இருதன்மையுடைய ஒருவனாகவே காட்டியுள்ளமை உணரத்தக்கது.
மேலும் ‘ஓருருவாயினை
மானாங்காரத்து ஈரியல்பாய்’ என்றருளினார்.
திருப்பரங்குன்றம் ‘நீடலர் சோதி’
எனத் தொடங்கும் பதிகத்துள் மூன்றாம் பாடலில்,
"ஓருடம்புள்ளே
உமையொருபாக முடனாகிப்
பாரிடம்பாட இனிதுறைகோயில் பரங்குன்றே".
என்பதனாலும், திருவண்ணாமலைப்
பதிகத்தில்,
"உண்ணாமுலை உமையாளொடும்
உடனாகியவொருவன்" என்பதனாலும்,
"ஆணும் பெண்ணுமாய்
அடியார்க்கு அருள்நல்கி"
என்னும் நாகைக்காரோணப்
பாடலாலும்
பொருள் ஒன்று, தன்மை இரண்டு என்பதைத் தெளிவித்தார்.
சூரியனும் அதன் கிரணமும் போல், சிவமும்,
சக்தியும் பிரிப்பின்றி ஒரே பொருளாய்,
இருதன்மை உடையதாம். இதனை மணிவாசகர், ‘நின்
அலர்ந்தமெய்க் கருணையும் நீயும் அவனியில் புகுந்தெமை
ஆட்கொள்ள வல்லாய்’ என்றார்.
அபிராமிப்பட்டர் ‘உமையும்
உமையொரு பாகரும் ஆகி ஏக உருவில் வந்து இங்கு
எமையும் தமக்கு அன்பு செய்ய வைத்தார்’ என்றார்.
இதனை, இறைவனது சொரூபநிலை எனக்
கூறுவர் சாத்திர நூலார். சொரூபநிலை என்பது தன்னிலை;
அஃதாவது இறைவனது இயற்கை நிலையாம்.
தடத்த நிலை:
இப்பரம்பொருள் தன்னை
நோக்க ஒன்றாயும்,
உலகமுகப்படும் போது, அஃதாவது உயிர்கள் ஈடேற்றம்
பெற உலகைத் தொழிற்படுத்தும் போது பலவாயும் பயன்படுகிறது.
பரசிவம், பராசக்தி பூரணமாயிருந்தும் செயல்படாமல்
ஒன்றாயும் இருதன்மைப்பட்டும் இருக்கிறது.
|