பக்கம் எண் :

 1. திருப்பிரமபுரம்253



திருச்சிற்றம்பலம்

திருஞானசம்பந்த சுவாமிகள்
அருளிச்செய்த

தேவாரத் திருப்பதிகங்கள்
முதல் திருமுறை

1. திருப்பிரமபுரம்

பதிக வரலாறு:

சோழ நாட்டிலே, சீகாழியிலே, தவம்பெருகும் கவுணிய குலத்தில், சிவதீக்ஷைபெற்ற வேதியர்குல திலகராகிய சிவபாத இருதயருக்கும் பகவதியம்மையாருக்கும் வேதநெறி தழைத்தோங்க, மிகுசைவத் துறைவிளங்க, சித்திரைமாதத்துத் திருவாதிரைத் திருநாளிலே திருமகனார் ஒருவர் தோன்றினார். இவருக்கு மூன்றாமாண்டு நடக்கும்பொழுது ஒருநாள் சிவபாத இருதயர் சீகாழிக் கோயிலுள் இருக்கும் பிரமதீர்த்தத்தில் நீராடச் சென்றார். குழந்தையும் அழுது கொண்டே உடன் சென்றது. சிவபாத இருதயர் உடன் வந்த சிறுவரைக் குளக்கரையில் உட்கார வைத்து, நீருள்மூழ்கி ‘அகமர்ஷணம்‘1 என்னும் திருமந்திரத்தைச்

__________________

1 அகமர்ஷணம் என்பதற்குப் பாவத்தைப் போக்குதல் என்பது பொருள். நீருள் மூழ்கியிருந்து ‘ஹ்ரண்யசிருங்கம்‘ என்று தொடங்கும் யஜுர் வேத மந்திரத்தை முழுவதுமாகவோ,

1 அகமர்ஷணம் என்பதற்குப் பாவத்தைப் போக்குதல் என்பது பொருள். நீருள் மூழ்கியிருந்து ‘ஹ்ரண்யசிருங்கம்‘ என்று தொடங்கும் யஜுர் வேத மந்திரத்தை முழுவதுமாகவோ,

"ருதஞ்ச சத்யஞ் சாபீத் தாத்தப ஸோத் யஜாயத;
ததோ ராத்ரி ரஜாயத ததஸ் சமுத்ரோ அர்ணவ:
ஸமுத்ரா தர்ணவாததி ஸம்வத்ஸரோ அஜாயத;
அஹோராத்ராணி விததத் விச்வஸ்ய மிஷதோ வசீ;
சூர்யா சந்த்ர மஸௌ தாதா யதா பூர்வ மகல்பயத்;
திவஞ்ச ப்ருதிவிஞ் சாந்தரிக்ஷ மதோ ஸுவ:"