பண்: நட்டபாடை
பதிக எண்: 1
திருச்சிற்றம்பலம்
1. தோடுடையசெவி1யன்விடையேறியோர்
தூவெண்மதிசூடிக்
காடுடையசுட லைப்பொடிபூசியென்
னுள்ளங்கவர்கள்வன்2
ஏடுடையமல ரான்முனை
நாட்பணிந்
தேத்தவருள்செய்த
பீடுடையபிர
மாபுரமேவிய
பெம்மானிவனன்றே.
1
_____________________________________
1. பொழிப்புரை: தோடணிந்த
திருச்செவியை உடைய உமையம்மையை இடப்பாகத்தே
உடையவனாய், விடை மீது ஏறி, ஒப்பற்ற தூய வெண்மையான
பிறையை முடிமிசைச் சூடி, சுடுகாட்டில் விளைந்த சாம்பற்
பொடியை உடல் முழுதும் பூசி வந்து என் உள்ளத்தைக்
கவர்ந்த கள்வன், இதழ்களை உடைய தாமரை மலரில்
விளங்கும் நான்முகன், படைத்தல் தொழில் வேண்டி
முன்னை நாளில் வழிபட அவனுக்கு அருள்புரிந்த பெருமை
மிக்க பிரமபுரத்தில் எழுந்தருளியுள்ள
பெருமானாகிய இவன் அல்லனோ!
குறிப்புரை: தோடுடையசெவியன்
என்பது முதலாக உள்ளங்கவர்ந்த கள்வனுடைய சிறப்பியல்புகள்
தெரிவிக்கப்பெறுகின்றன. பிள்ளையாருடைய அழுகைக்
குரல் சென்று பரந்து திருமுலைப்பால் அருளச் செய்தது
திருச்செவியாதலின் அதனை முதற்கண் தெரிவிக்கிறார்.
உலகுயிர்கள் துன்பம் நீங்கி இன்பம் அடைதலே
பொருளாக, பாடல் பரமனார் திருச்செவியில் சென்று
சேர, திருச்செவியை முதற்கண் சிறப்பித்தார் என்பது,
"பல்லுயிரும் களிகூரத் தம் பாடல் பரமர் பால் செல்லுமுறை
பெறுவதற்குத் திருச்செவியைச் சிறப்பித்து" என்ற
சேக்கிழார் வாக்கால் தெரியலாகும். தோடுடையசெவி
என்றதால்
____________________________________________
1"தக்ஷிணே குண்டலே
கர்ணே வாம கர்ணேது பத்ரகம்"
- பூர்வ காரணம்
2"தஸ்கராணாம்
பதயே நமோ நம:"
- ஸ்ரீருத்திரம்
|