6. மறைகலந்தவொலி
பாடலோடாடல
ராகிமழுவேந்தி
இறைகலந்தவின
வெள்வளைசோரவென்
னுள்ளங்கவர்கள்வன்
கறைகலந்தகடி
யார்பொழில்நீடுயர்
சோலைக்கதிர்சிந்தப்
பிறைகலந்தபிர
மாபுரமேவிய
பெம்மானிவனன்றே.
6
__________________________________________________
ஆணுருவில் அமைந்த
சடையுமாயிருத்தலின் இரண்டிற்கு மேற்பச்சடையன்
என்றார். உரைசெய்ய - தோழியர் தலைவன் இயல்பைச்
சொல்ல. உரையின் வாயிலாக உள்ளத்தில் புகுந்து
விரும்பி உள்ளத்தைத் தமதாக்கிக் கொண்டான் என்பார்
"அமர்ந்து எனது உள்ளம் கவர்கள்வன்" என்றார்.
‘ஓர் காலம் கடல் கொள்ள மிதந்த தலம் இது என்னும்
பெருமைபெற்ற பிரமபுரம்‘ என இயைத்துப் பொருள் காண்க.
ஓர்காலம் - சர்வ சங்காரகாலம்.
6. பொ-ரை: ஒலி வடிவினதான
வேதத்தைப் பாடிக் கொண்டும், ஆடிக் கொண்டும்,
மழுவாயுதத்தைக் கையில் ஏந்திக் கொண்டும் வந்து
எனது முன் கையில் உள்ள ஓரினமான வெள்ளிய வளையல்கள்
கழன்று விழ என்னை மெலிவித்து உள்ளத்தைக் கவர்ந்த
கள்வன், இருள் செறிந்த, மணமுடைய பொழில்களிடத்தும்
நீண்டு வளர்ந்த மரங்களை உடைய சோலைகளிடத்தும்
நிலவைப் பொழியும் பிறையைச் சூடியவனாய்ப்
பிரமபுரத்தில் மேவிய பெருமானாகிய இவன் அல்லனோ!
கு-ரை: பாடுவது வேதம்,
செய்வது கள்ளம் என்ற நிலையில் பெருமான்
இருக்கின்றார் என்பதைக் காட்டுவன முன் இரண்டு அடி.
ஒலி கலந்த மறை பாடலோடு எனக் கூட்டி ஒலிவடிவாய வேதத்தைப்
பாடுதலை உடையவர் எனப் பொருள் காண்க.
மழு - தவறிழைத்தாரைத்
தண்டித்தற்காக ஏந்திய சங்கார காரணமாகிய தீப்பிழம்பு;
ஆயுதமுமாம். இறை - மணிக்கட்டு. வெள்வளை - சங்க
வளையல்கள். முன்கையில் செறிந்து கலந்திருந்த சங்க
வளையல்கள் சோர்ந்தன என்பதால், ‘உடம்புநனி
சுருங்கல்‘ என்னும் மெய்ப்பாடு உணர்த்தியவாறு. கறை
- இருள். கடி - மணம். பொழில் - நந்தனவனத்தும்,
சோலை - தானே வளர்ந்த சோலைகளிடத்தும். கதிர்
|