பக்கம் எண் :

276திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


மேவும் - விரும்பும். கற்று நல்ல அவர் - இறைவன் புகழைப்படித்து நல்லவராயினார்கள். குற்றம் - சொல்லான் வருங்குற்றம். குறை - சிந்தனையால் வரும் தோஷம்.

ஞானசம்பந்தன் புகலூரைச் (சொன்ன) தமிழ்மாலை பற்றி, பாடிய மாந்தர் பொலிவார் என இயைத்துப் பொருள் கொள்க. ‘கற்று நல்ல அவர் காழி‘ என்றது ‘கற்றவர்கள் பணிந்தேத்தும் கழுமலத்துள் ஈசன்‘ என்ற பகுதியை நினைவூட்டுவது. ஒழியா - ஒழிந்து; செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம்.

திருத்தொண்டர் புராணம்

திருஞானசம்பந்தர் புராணம்

நீலநக் கடிகளும் நிகழ்சிறுத் தொண்டரும்

உடன் அணைந்தெய்து நீர்மைச்

சீலமெய்த் தவர்களுங் கூடவே கும்பிடுங்

செய்கைநேர் நின்று வாய்மை

சாலமிக் குயர்திருத் தொண்டின்உண்மைத்திறந்

தன்னையே தெளிய நாடிக்

காலமுய்த் தவர்களோ டளவளா விக்கலந்

தருளினார் காழி நாடார்.

கும்பிடுங் கொள்கையிற் குறிகலந் திசை எனும்

பதிகமுன் னான பாடல்

தம்பெருந் தலைமையால் நிலைமைசால் பதியதன்

பெருமைசால் புறவி ளம்பி

உம்பரும் பரவுதற் குரியசொற் பிள்ளையார்

உள்ள மெய்க் காதல் கூர

நம்பர்தம் பதிகளா யின எனைப் பலவுமுன்

நண்ணியே தொழந யந்தார்.

- சேக்கிழார்.