பக்கம் எண் :

 2. திருப்புகலூர275


கொய்துபத்தர்மல ரும்புனலுங்கொடு

தூவித்துதிசெய்து

மெய்தவத்தின்முயல் வாருயர்வானக

மெய்தும்புகலூரே. 10

22. புற்றில்வாழும்அர வம்மரையார்த்தவன்

மேவும்புகலூரைக்

கற்றுநல்லவவர் காழியுண்ஞானசம்

பந்தன்றமிழ்மாலை

பற்றியென்றும்இசை பாடியமாந்தர்

பரமன்னடிசேர்ந்து

குற்றமின்றிக்குறை பாடொழியாப்புக

ழோங்கிப் பொலிவாரே. 11

திருச்சிற்றம்பலம்

__________________________________________________

களின் தலைவராகிய சிவபிரானுக்கு மிக உகந்த இடம், அடியவர்கள் மலர் கொய்து வந்து தூவிப் புனலாட்டித் துதி செய்து தவநெறியில் முயன்று உயர் வானகத்தை எய்துதற்குரிய வழிபாடுகளை ஆற்றும் புகலூராகும்.

கு-ரை: மொழியைத் தவிர்வார்களாகிய செய்தவத்தரது கடவுளிடம் என இயைக்க. அன்றிச்செய்த அவத்தர் எனப்பெயரெச்சத்து அகரம் விகாரத்தால் தொக்கதாகக்கொண்டு வீண்காரியம் விளைவிப்பவர்கள் எனத் தேரர்க்கு அடைமொழியாகவும் ஆக்கலாம். செப்பில் - உரையில், மெய்தவம் எதுகை நோக்கி மிகாதாயிற்று.

11. பொ-ரை: புற்றில் வாழும் பாம்புகளை இடையிலே கட்டியவனாகிய சிவபிரான் எழுந்தருளிய புகலூர்மீது இறைவனது பொருள் சேர் புகழைக் கற்று வல்லவர்கள் வாழும் சீகாழிப் பதியில் தோன்றிய ஞானசம்பந்தன் பாடிய தமிழ்மாலையாகிய இத்திருப்பதிகத்தை, என்றும் இசையோடு பாடி வழிபடும் மாந்தர்கள் இறைவன் திருவடி நீழலை அடைந்து குற்றம் குறைபாடு அகன்று புகழோங்கிப் பொலிவெய்துவார்கள்.

கு-ரை: பாம்பு என்ற பொதுமை பற்றி யாகத்திலிருந்து வந்த இந்தப் பாம்புகளையும் ‘புற்றில் வாழும் அரவம்‘ என்றார். சாதியடை.