பக்கம் எண் :

274திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


20. நாகம்வைத்தமுடி யானடிகைதொழு

தேத்தும்மடியார்கள்

ஆகம்வைத்தபெரு மான்பிரமன்னொடு

மாலுந்தொழுதேத்த

ஏகம்வைத்தவெரி யாய்மிகவோங்கிய

எம்மானிடம்போலும்

போகம்வைத்தபொழி லின்னிழலான்மது

வாரும்புகலூரே. 9

21. செய்தவத்தர்மிகு தேரர்கள்சாக்கியர்

செப்பிற்பொருளல்லாக்

கைதவத்தர்மொழி யைத்தவிர்வார்கள்

கடவுள்ளிடம்போலும்

__________________________________________________

நெரித்து எனாது நெரிவித்து என்றது விரலின்செயல் என்பதைத் தெரிவிக்க. இவரே நினைத்துச் செய்யின் நேரும் தீமை பெரிதாயிருக்கும் என்பது. இசை - சாமகானம். பொன்னிலங்கும் மணி மாளிகையின்மேல் மதிதோயும் என்பது, புகலூரும் மதிசூடி இறைவனைப் போல் சாரூபம் பெற்றது என்பது அறிவித்தவாறு.

9. பொ-ரை: பாம்பை முடிமிசை வைத்துள்ளவனும், தன் திருவடிகளைப் போற்றும் அடியார்கள், தம் மனத்தின்கண் வைத்துப் போற்றும் தலைவனும், பிரமனும், திருமாலும் தொழுதேத்த ஏகனாய் எரி வடிவில் மிக ஓங்கிய எம்மானுமாகிய இறைவனுக்கு மிக உகந்த இடம், பல்வகைப் பயன்களையும் தருவதோடு நிழலாற் சிறந்ததாய்த் தேன் நிறைந்து விளங்கும் பொழில் சூழ்ந்த புகலூராகும்.

கு-ரை: அடியார்கள் ஆகம்வைத்த பெருமான் - அடியார்களைத் தமது திருவுள்ளத்து இடம்பெறவைத்த பெருமான், அடியார்கள் தமது நெஞ்சத்தில் வைத்த பெருமான் என்றுமாம். ஏகம்வைத்த எரி - ஒன்றான தீப்பிழம்பு, போகம்வைத்த பொழில் என்றது தனிமகன் வழங்காப் பனிமலர்க்கா என்றதுபோல இன்பச் சிறப்பு அறிவித்தவாறு.

10. பொ-ரை: எண்ணிக்கையில் மிக்கதேரர், சாக்கியர் சமணர்கள் ஆகியவர்களின் உண்மையல்லாத வஞ்சகம் நிறைந்த மொழிகளைக் கேளாதவராய், மிகுதியான தவத்தைச் செய்யும் மெய்யடியார்