பக்கம் எண் :

 2. திருப்புகலூர273


கள்ளமார்ந்துகழி யப்பழிதீர்த்த

கடவுள்ளிடமென்பர்

புள்ளையார்ந்தவய லின்விளைவால்வளம்

மல்கும்புகலூரே. 7

19. தென்னிலங்கையரை யன்வரைபற்றி

யெடுத்தான்முடிதிண்டோள்

தன்னிலங்குவிர லால்நெரிவித்திசை

கேட்டன்றருள்செய்த

மின்னிலங்குசடை யான்மடமாதொடு

மேவும்மிடமென்பர்

பொன்னிலங்குமணி மாளிகைமேல்மதி

தோயும்புகலூரே. 8

__________________________________________________

பற்றிய வினையையும் பழியையும் தீர்த்தருளிய கடவுள் உறையும் இடம், மீன் கொத்தி முதலிய பறவை இனங்கள் மீன்களைக் கவர வந்து தங்கும் வயல்களின் விளைவால் வளம் மல்கிய புகலூராகும்.

கு-ரை: வெள்ளம் - கங்கை; வெள்ளம் ஆர்ந்து மிளிர் செஞ்சடை என்றது செருக்கால் மிக்க கங்கையை அடக்கியது என்றவாறு. விளங்கும் மதி சூடி என்பது இளைத்த மதியை விளங்க வைத்தது. இதனால் தருக்கினாரை ஒடுக்குதலும் தாழ்ந்தாரை உயர்த்துதலும் இறைவன் கருணை என்பது தெரிவிக்கப்படுகின்றன. எம் கள்ளம் ஆர்ந்து பழிதீர்த்த கடவுள் - அநாதியே பற்றிநிற்கும் எமது ஆணவ மலமாகிய வஞ்சனை நீங்கப் ‘பெத்தான்மாக்கள்‘ என்னும் பழியைத் தீர்த்த கடவுள். புள் - நாரை முதலியன.

8. பொ-ரை: அழகிய இலங்கை அரசனாகிய இராவணன் கயிலை மலையை இரு கரங்களாலும் பற்றி எடுத்தபோது அவனுடைய தலைகள், திண்ணிய தோள்கள் ஆகியவற்றைத் தன் கால் விரலால் நெரித்துப் பின் அவன் சாமகானம் பாடக்கேட்டு அன்று அவனுக்கு அருள் செய்தவனாகிய தாழ்ந்த சடைமுடி உடைய பெருமான் தன் தேவியோடு மேவும் இடம், மதி தோயும் அழகிய மாளிகைகள் நிறைந்த புகலூராகும்.

கு-ரை: தென் - அழகு, திசைகுறித்ததன்று. வரை - கயிலை;