பக்கம் எண் :

272திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


17. கழலினோசைசிலம் பின்னொலியோசை

கலிக்கப்பயில்கானில்

குழலினோசைகுறட் பாரிடம்போற்றக்

குனித்தாரிடமென்பர்

விழவினோசையடி யார்மிடைவுற்று

விரும்பிப்பொலிந்தெங்கும்

முழவினோசைமுந் நீரயர்வெய்த

முழங்கும்புகலூரே. 6

18. வெள்ளமார்ந்துமிளிர் செஞ்சடைதன்மேல்

விளங்கும்மதிசூடி

உள்ளமார்ந்தவடி யார்தொழுதேத்த

வுகக்கும்அருள்தந்தெம்

__________________________________________________

கேடு பலவாமாகலின் பையப் பாற்றுவார் என்றார். பாற்றுதல் - சிதறிப்போகச் செய்தல். பணிவாரை - அடியார்கள் இடத்தில்; வேற்றுமை மயக்கம், மெய்ய - உண்மையாக, பொய் - அஞ்ஞானம்.

6. பொ-ரை: இரண்டு திருவடிகளிலும், விளங்கும் வீரக் கழல் சிலம்பு ஆகியன ஒலிக்கவும், குழல் முதலிய இசைக்கருவிகள் முழங்கவும், குள்ளமான பூதகணங்கள் போற்றவும், பலகாலும் பழகிய இடமாக இடுகாட்டில் முற்றழிப்பு நடனம் புரியும் இறைவனுடைய இடம், திருவிழாக்களின் ஓசையும், அடியவர் மனமகிழ்வோடு எங்கும் முழக்கும் முழவோசையும் கடலோசையைத் தளரச் செய்யும் ஒலியைத் தரும் புகலூர் என்பர்.

கு-ரை: கழலின் ஓசை - ஆண்பகுதியாகிய வலத்தாளில் அணிந்த வீரக்கழலின் ஓசை; சிலம்பின் ஓசை - பெண்பகுதியாகிய இடத்தாளில் அணிந்த சிலம்பின் ஓசை. அன்றிச் சிவபெருமானது கழலின் ஓசையும் மாறாடிய மகாகாளியின் சிலம்பின் ஓசையும் என்பாருமுளர். குனித்தார் - ஆடியவர், குறள்பாரிடம் - குள்ளமான பூதங்கள், மிடைவுற்று - நெருங்கி, முந்நீர் - கடல்.

7. பொ-ரை: கங்கைநீர் அடங்கி விளங்கும் செஞ்சடைமேல் விளக்கமான பிறைமதியைச் சூடி, தம்மிடம் மனம் ஒன்றிய அடியவர் தொழுது ஏத்த அவர்கள் மனம் மகிழும் அருளைப் புரிந்து என்னைப்