பக்கம் எண் :

 2. திருப்புகலூர271


காரின்மல்குகடல் நஞ்சமதுண்ட

கடவுள்ளிடமென்பர்

ஊரின்மல்கிவளர் செம்மையினாலுயர்

வெய்தும்புகலூரே. 4

16. செய்யமேனிவெளி யபொடிப்பூசுவர்

சேரும்மடியார்மேல்

பையநின்றவினை பாற்றுவர்போற்றிசைத்

தென்றும்பணிவாரை

மெய்யநின்றபெரு மானுறையும்மிட

மென்பரருள்பேணிப்

பொய்யிலாதமனத் தார்பிரியாது

பொருந்தும்புகலூரே. 5

__________________________________________________

வில்லாகக் கொண்டு முனிந்தவன். உலக உயிர்கள் உய்யக் கருநிறமுடைய கடலிடையே தோன்றிய நஞ்சை அமுதமாக உண்ட கடவுள். அத்தகையோன் விரும்பி உறையுமிடம் ஒழுக்கத்தால் உயர்ந்த மக்கள் வாழ்ந்து சிறப்பெய்தும் புகலூராகும்.

கு-ரை: அடையார் - (தேவர்க்குப்) பகைவர். மலையைச் சிலையாக முனிந்தான் என்றது அவன் முனிவொன்றுமே பகை தணித்து ஆட்கொண்டது; வில்லான மலை அன்று என்பதாம், காரின் மல்கும் - கருமைநிறத்தில் மிகுந்த, ஊரின் மல்கிவளர் செம்மையினால் உயர்வெய்தும் புகலூர் - ஊர்களில் ஒருகாலைக்கு ஒருகால் நிறைந்து வளரும் ஒழுக்கத்தாலுயர்ந்த புகலூர்.

5. பொ-ரை: சிவந்த திருமேனியில் வெண்ணிறமான திருநீற்றைப் பூசுபவர். தம்மை வந்தடையும் அடியவர்களைத் தாக்க வரும் வினைகளை நீக்குபவர். என்றும் தம்மைப் பாடிப் பணிவார்க்கு உண்மையானவர். அவர் விரும்பி உறையும் இடம், அருளையே விரும்பிப் பொய்யில்லாத மனத்தவர் நீங்காது வாழும் புகலூர் என்பர்.

கு-ரை: அடியார்மேல் நின்றவினை பையப் பாற்றுவார். பைய - மெதுவாக, நோயை விரைந்து நீக்கினால் அதனால் விளையும் தீமை பெரிதாய், நோயின் பெருமையும், மருத்துவன் உழைப்பும் அறியப்படாதவாறுபோல, வினைகளை விரைந்து நீக்கின் விளையுங்