பக்கம் எண் :

270திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


14. பண்ணிலாவும்மறை பாடலினான்இறை

சேரும்வளையங்கைப்

பெண்ணிலாவவுடை யான்பெரியார்கழல்

என்றுந்தொழுதேத்த

உண்ணிலாவியவர் சிந்தையுள்நீங்கா

வொருவன்னிடமென்பர்

மண்ணிலாவும்மடி யார்குடிமைத்தொழின்

மல்கும்புகலூரே. 3

15. நீரின்மல்குசடை யன்விடையன்அடை

யார்தம்மரண்மூன்றுஞ்

சீரின்மல்குமலை யேசிலையாகமு

னிந்தானுலகுய்யக்

__________________________________________________

யவன். கருமான் - ‘கிருஷ்ண மிருகம்‘ என்னும் மான், உரி - தோல், இமையோர் - தேவர்கள்; சோலைப்போதில் அங்கு நசையால் வரிவண்டு பாடும் எனப் பிரித்துப் பொருள்கொள்க. அங்கு - அசை; போதுஇலங்கு எனப் பிரித்துக்கோடலும் ஒன்று.

3. பொ-ரை: இசையமைதி விளங்கும் வேத கீதங்களைப் பாடுபவன் - முன்கைகளில் வளையல்கள் விளங்கும் அழகிய கைகளை உடைய உமையம்மையைத் தனது தேவியாக உடையவன். தன் திருவடிகளை என்றும் தொழுது ஏத்தும் பெரியவர்களின் உள்ளத்தே விளங்குவதோடு அவர்களின் அடிமனத்தில் என்றும் நீங்காதிருப்பவன். அத்தகையோன் விரும்பி உறையுமிடம் நிலவுலகில் வாழும் அடியவர்கள் குடும்பத்துடன் வந்து பணி செய்யும் புகலூராகும்.

கு-ரை: பண் நிலாவும் மறை - இசை தாமே விளங்கும் வேதம். இறை - முன்கை, பெண் - உமாதேவி, பெரியார் - சிவஞானத்தில் பெரியவர்கள்; உள்நிலாவி அவர் சிந்தை நீங்கா ஒருவன் எனப்பிரிக்க. குடிமைத்தொழில் - வேளாண்மைத் தொழில்; மிராசுக்குக் குடித்தனம் என்ற வழக்குண்மை காண்க. பாடலினான், உடையான், ஒருவன் இடம் புகலூரே என்பர் எனக் கூட்டுக.

4. பொ-ரை: கங்கை நீரால் நிறைவுற்ற சடைமுடியை உடையவன். விடையூர்தியன். முப்புரங்களையும் சிறப்புமிக்க மேருமலையை