பக்கம் எண் :

 2. திருப்புகலூர269


13. காதிலங்குகுழை யன்னிழைசேர்திரு

மார்பனனொருபாகம்

மாதிலங்குதிரு மேனியினான்கரு

மானின்னுரியாடை

மீதிலங்கவணிந் தானிமையோர்தொழ

மேவும்மிடஞ்சோலைப்

போதிலங்குநசை யால்வரிவண்டிசை

பாடும்புகலூரே. 2

__________________________________________________

செறிந்த மலர்கள்மீது புள்ளிகளை உடைய வண்டுகள் மொய்த்துத் தேனுண்ணும் வானளாவிய பொழில் சூழ்ந்த புகலூராகும்.

கு-ரை: குறி கலந்த இசை - குறித்த சுரத்தானங்களோடு ஒன்றிய இசை, பாடலினான் - இறைவன், மனக்குறிப்போடு ஒன்றிய இசையமைந்த பாடலினான் என்பாரும் உளர். நசை - விருப்பம். நெறி - முறை, அஃதாவது அவ்வவ்வான்மாக்களின் பருவநிலைக்கு ஏற்ப, விறகில் தீயாகவும் பாலின்நெய்யாகவும் மணியுட்சோதியாகவும் கலந்து நிற்கும் முறை, பலி - பிச்சை; முறி கலந்தது ஒரு தோல் - கொன்ற புலியின் தோலை.

பொறி - வண்டு. உடையான் இடம் புகலூர் என இயைக்க. இது பின்வரும் பாடற்கும் இயையும்.

2. பொ-ரை: காதில் விளங்கும் குழையை அணிந்தவன். பூணூல் அணிந்த அழகிய மார்பினன். இடப்பாகமாக உமையம்மை விளங்கும் திருமேனியன். யானையினது தோலை உரித்து மேல் ஆடையாக அணிந்தவன். அத்தகையோன் இமையவர் தொழமேவும் இடம், சோலைகளில் தேனுண்ணும் விருப்பினால் வரிவண்டுகள் இசைபாடும் புகலூராகும்.

கு-ரை: ஒருபாகம் மாது இலங்கும் திருமேனியன் என்பதால், காதிலங்கு குழையன் என்பதற்குப் பெண்பாதியில் காதில் விளங்கும் குழையை உடையவன் என்றும், ஆண்பாதியில் தளிரை உடையவன் என்றும் பொருள்கொள்க. குழை - பனந்தோட்டால் செய்யப்படும் மகளிர் காதணி; ஆடவர் காதில் செருகிக்கொள்ளும் மணத்தழை; இதனை வடநூலார் ‘கர்ணாவதம்சம்‘ என்பர். இழைசேர் திருமார்பன் - பூணூல் சேர்ந்த, இழைத்த தங்க அணிகள் சேர்ந்த மார்பினையுடை