2. திருப்புகலூர்
பதிக வரலாறு:
திருஞானசம்பந்தப்பெருமான்
திருப்புகலூருக்கு எழுந்தருளும்போது, இதற்கு முன்னரே
அங்கு எழுந்தருளியிருந்த திருநாவுக்கரசு சுவாமிகள்
அவ்வூர் அடியார் பெருமகனாராகிய முருக நாயனாரோடும்
பிற அடியார்களோடும் பிள்ளையாரை எதிர்கொண்டு
அழைத்தனர். சம்பந்தப் பெருமான் அவர்கள் வேண்டுகோட்கு
இணங்கி, முருக நாயனார் திருமடத்தில் எழுந்தருளினார்கள்.
அங்கே சிறுத்தொண்டர், திருநீலநக்கர் முதலிய
அடியார்களும் வந்து தரிசித்து அளவளாவி இருந்தனர்.
சுவாமிகள், அவர்கள் அனைவரோடும் திருக்கோயிலுக்குச்
சென்று வழிபடும்போது புகலூர்ப் பெருமையை உணர்த்தும்
முகத்தான் இப்பதிகத்தை அருளிச் செய்தார்கள்.
பண்: நட்டபாடை
பதிக எண்: 2
திருச்சிற்றம்பலம்
12. குறிகலந்தவிசை
பாடலினான்நசை
யாலிவ்வுலகெல்லாம்
நெறிகலந்ததொரு
நீர்மையனாயெரு
தேறிப்பலிபேணி
முறிகலந்ததொரு தோலரைமேலுடை
யானிடமொய்ம்மலரின்
பொறிகலந்தபொழில்
சூழ்ந்தயலேபுய
லாரும்புகலூரே. 1
__________________________________________________
1. பொ-ரை: சுரத்தானங்களைக்
குறிக்கும் இசையமைதியோடு கூடிய பாடல்களைப் பாடுபவன்.
உயிர்கள் மீது கொண்ட பெருவிருப்பால் இவ்வுலகம்
முழுவதும் வாழும் அவ்வுயிர்கள் தம்மை உணரும் நெறிகளை
வகுத்து அவற்றுள் கலந்து நிற்பவன். எருதின்மிசை ஏறி
வந்து மக்கள் இடும்பிச்சையை விரும்பி ஏற்பவன்.
இடையில் மான் தோலாடையை உடுத்துபவன். அவன்
விரும்பி உறையும் இடம்
|