பக்கம் எண் :

28ஸ்ரீலஸ்ரீ குருமகா சந்நிதானத்தின் ஆசியுரை(முதல் திருமுறை)


திருமுறைகளையும் தொகுத்தவர் ஆவர். இதனால் இந் நம்பிகள் வேதத்தை நான்காக வகுத்த வேதவியாசருக்கு ஒப்பாகப் போற்றப்படுகிறார். அநபாயன் என்னும் சிறப்புப்பெயர் பெற்ற இரண்டாம் குலோத்துங்கன் சேக்கிழாரைக் கொண்டு பெரியபுராணம் பாடச் செய்தவன்.

"திருத்தொண்டர் புராணம்எழு தியமுறையை மறையோர்

சிவமூல மந்திரத்தால் அருச்சனைசெய் திறைஞ்சி

இருக்குமுதல் மறைநான்கில் இன்றுமுத லாக

இதுவும்ஒரு தமிழ்வேதம் ஐந்தாவ தென்று

கருத்திருத்தி அமுதடைக்காய் நறுந்தூப தீபம்

கவரிகுடை கண்ணாடி ஆலத்தி நீறு

பரித்தளவு செயக்கண்டு வளவர்பிரான் முறையைப்

பசும்பட்டி னாற்சூழ்ந்து பொற்கலத்தில் இருத்தி."

என்ற உமாபதி சிவம் அருளிய சேக்கிழார் புராணப் பாடலால், திருத்தொண்டர் புராணத்தைச் சிவமாகப் பாவித்து, சிவமூல மந்திரத்தால் மறையோர் அர்ச்சித்து, ‘தோடு’ செய்த திருநெறிய செந்தமிழோடு ஒக்கும் என்றுரை செய்து, செப்பேடு செய்வித்துப் பன்னிரண்டாந் திருமுறையாக ஏற்றுப் போற்றினர்.

எனவே, முதலாம் இராஜராஜன், இராஜேந்திரன், இரண்டாம் குலோத்துங்கன் ஆகிய மூவேந்தர் காலத்திலேயே இப்பன்னிரு திருமுறைகள் தொகுக்கப் பெற்றன என்பதைத் தெளிந்து பணிந்து போற்றுவோமாக.

செப்பேடு:

கி.பி. 1070 முதல் கி.பி. 1120 வரை ஆட்சி புரிந்தவன் முதல் குலோத்துங்கன். இவன் படைத்தலைவர்களுள் ஒருவனான மணவிற் கூத்தன் காளிங்கராயன் என்பான், மூவர் தேவாரத் திருப்பதிகங்களைச் செப்பேடுகளில் எழுதுவித்து, திருக்கோயிலுள் சேமமுற வைத்தான் என்று தில்லைக் கோயில் கல்வெட்டுக் கூறுகிறது. அதுபற்றிய வெண்பா:

"முத்திறத்தா ரீசன் முதற்றிறத்தைப் பாடியவா(று)
ஒத்தமைத்த செப்பேட்டி னுள்எழுதி - இத்தலத்தின்
எல்லைக் கிரிவாய் இசைஎழுதி னான்கூத்தன்