பக்கம் எண் :

280திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


26. ஒற்றையேறதுடை யான்நடமாடியோர்

பூதப்படைசூழப்

புற்றினாகமரை யார்த்துழல்கின்றவெம்

பெம்மான்மடவாளோ

டுற்றகோயிலுல கத்தொளிமல்கிட

வுள்கும்வலிதாயம்

பற்றிவாழும்மது வேசரணாவது

பாடும்மடியார்க்கே. 4

_________________________________________________

வெம்மையாய் அடியவர்களுக்கு விருப்பமாய் இருக்கும்படை. திருமாது - உமாதேவி.

முடியுடை மன்னனைக்கண்டு பிடியரிசி யாசிப்பார் போலாது வலிதாயநாதரைத் தியானித்துக் காமியப் பயனைக் கருதாதீர்கள்; உய்யுநெறியைக் கேளுங்கள்; அப்போது அதற்கிடையூறாகிய வினைகள் நீங்கும்; இன்பம் உண்டாகும்; வினை நீங்குத லொன்றுமே இன்பம் என்பது சித்தாந்த முத்தியன்றாதலின் வினை தீரும் என்பதோடமையாது நலமாமே என்று மேலும் கூறினார்.

4. பொ-ரை: அடியவர்க்கு வலிதாயத்தைப் பற்றி வாழ்வதே சரண் என முடிபு காண்க.

ஒற்றை விடையை உடையவன். சிறந்த பூதப்படைகள் சூழ்ந்துவர, புற்றில் வாழும் நாகங்களை இடையில் கட்டி நடனமாடி, உழலும் எம்பெருமான், உமையம்மையோடு உறையும் கோயில் உலகின்கண் ஒளி நிலைபெற்று வாழப் பலரும் நினைந்து போற்றும் வலிதாயமாகும். அடியவர்கட்கு அத்தலத்தைப் பற்றி வாழ்வதே அரணாம்.

கு-ரை: இது அடியார்களாகிய உங்களுக்கு வலிதாயத்தைப் பற்றி வாழ்வதே சரண் என்கின்றது.

ஒற்றையேறு - மற்ற இடபங்களோடு உடன்வைத்து எண்ணக் கூடாத அறவடிவமாகிய இடபம். புற்றில் நாகம் சாதியடை. வலிதாயம் உலகம் முழுவதுமே ஒளிநிறைய நினைக்கப்படுவது என்பது, வாழுமது - வாழ்வது. சரண் - அடைக்கலஸ்தானம்.