பக்கம் எண் :

 3. திருவலிதாயம்281


27. புந்தியொன்றிநினை வார்வினையாயின

தீரப்பொருளாய

அந்தியன்னதொரு பேரொளியானமர்

கோயிலயலெங்கும்

மந்திவந்துகடு வன்னொடுங்கூடி

வணங்கும் வலிதாயஞ்

சிந்தியாதவவர் தம்மடும்வெந்துயர்

தீர்தலெளிதன்றே. 5

28. ஊனியன்றதலை யிற்பலிகொண்டுல

கத்துள்ளவரேத்தக்

கானியன்றகரி யின்னுரிபோர்த்துழல்

கள்வன்சடைதன்மேல்

__________________________________________________

5. பொ-ரை: வலிதாயம் கோயிலைச் சிந்தியாதவர் துயர் தீர்தல் எளிதன்று என முடிபு கொள்க. மனம் ஒன்றி நினைபவர் வினைகளைத் தீர்த்து அவர்க்குத் தியானப் பொருளாய்ச் செவ்வான் அன்ன பேரொளியோடு காட்சி தரும் இறைவன் எழுந்தருளியுள்ள கோயிலாய் அயலில் மந்தி ஆண்குரங்கோடு கூடி வந்து வணங்கும் சிறப்பை உடைய திருவலிதாயத்தைச் சிந்தியாத அவர்களைத் தாக்கும் கொடிய துன்பம், தீர்தல் எளிதன்று.

கு-ரை: இது, பரிபாக விசேடம் கைவரப் பெறாத மந்தியும் கடுவனும்கூட வணங்கும்பொழுது, அச்சிறப்பு வாய்ந்த மக்கள் வழிபடாராயின் அவர் வினை தீராதென்பதை அறிவிக்கின்றது. புந்தியொன்றி நினைவார் - மனம் பொறிவழிச்சென்று புலன்களைப் பற்றாமல் ஒருமையாய் நின்று தியானிக்கும் அடியார்கள். பொருளாய - தியானிக்கும் பொருளாய. அந்தியன்னதொரு பேரொளியான் - அந்திக்காலத்துச் செவ்வொளிபோன்ற திருமேனியுடையான். மந்தியும் கடுவனும் வணங்கும் வலிதாயம் என்றமையால் மக்களும் தம் இல்லற இன்பம் குலையாதே வந்து வணங்கும் பெற்றியர் என்பது விளக்கியவாறு.

6. பொ-ரை: வலிதாயத்திறைவனை நறுமாமலர் கொண்டு நின்றேத்தத் தெளிவு ஆம் என வினை முடிபு கொள்க. ஊன் கழிந்த பிரமகபாலத்தில் பலி ஏற்று உலகத்தவர் பலரும் ஏத்தக்காட்டில் திரியும் களிற்றுயானையின் தோலை உரித்துப் போர்த்துத் திரியும் கள்வனும்,