வாசிதீரவடி
யார்க்கருள்செய்து
வளர்ந்தான்வலிதாயம்
பேசுமார்வமுடை யாரடியாரெனப்
பேணும்பெரியோரே.
10
33. வண்டுவைகும்மண
மல்கியசோலை
வளரும்வலிதாயத்
தண்டவாணனடி யுள்குதலாலருண்
மாலைத்தமிழாகக்
கண்டல்வைகுகடற்
காழியுண்ஞானசம்
பந்தன்றமிழ்பத்துங்
கொண்டுவைகியிசை
பாடவல்லார்குளிர்
வானத்துயர்வாரே.
11
திருச்சிற்றம்பலம்
__________________________________________________
அன்பின்றியும்
பேசும் சொற்களைப் பொருளாகக் கொள்ளாதீர்.
குற்றம் தீர, அடியவர்கட்கு அருள் செய்து புகழால்
ஓங்கிய பெருமானது வலிதாயத்தின் புகழைப் பேசும்
ஆர்வம் உடையவர்களே, அடியார்கள் என
விரும்பப்படும் பெரியோர் ஆவர்.
கு-ரை: இது,
ஏற்றத்தாழ்வற அடியார் எல்லார்க்கும் அருள்
செய்யும் வலிதாயத்தைப் பேசுபவர்க்கு யாம் அடியர்
எனப் பெரியோர்கள் பேணுவார் என்கின்றது.
ஆசியார மொழியார் - ஆசிகளை நிரம்பச்சொல்லும்
மனப்பண்பற்ற சமணர்கள். அல்லாதவர் -
சைவத்திற்குப் புறம்பானவர்கள். ஏசி - இகழ்ந்து,
ஈரம் - அன்பு. பொருள் என்னேல் - உறுதிப்
பொருளாகக் கொள்ளாதே. வாசிதீர - வேற்றுமை
நீங்க. இறைவன் வாசிதீரக்காசு நல்கும் வள்ளன்மை
விளங்கக் கூறியதுமாம். பேசும் ஆர்வம் - இடைவிடாது
பாராட்டிப்பேசும் விருப்பம். ஆர்வம் - அமையாத
காதல். பெரியோர் ஆர்வமுடையார்க்கு அடியார்
எனப் பேணும் என உருபுவிரித்துப் பொருள்காண்க.
11. பொ-ரை: வலிதாய
நாதன்மீது பாடிய இத்திருப்பதிகத்தை இசையோடு
பாடுவார் குளிர் வானத்துயர்வார் என முடிபு காண்க.
வண்டுகள்
மொய்க்கும் மணம் நிறைந்த சோலைகள் வளரும்
திருவலிதாயத்தில் விளங்கும் அனைத்துலக நாதனின்
திருவடிகளைத்
|