பக்கம் எண் :

 4. திருப்புகலியும் திருவீழிமிழலையும்291


ஏகபெ ருந்தகை யாயபெம்மா

னெம்மிறை யேயிது வென்கொல்சொல்லாய்

மேகமு ரிஞ்செயில் சூழ்மிழலை

விண்ணிழி கோயில் விரும்பியதே. 4

38. சந்தள றேறுத டங்கொள்கொங்கைத்

தையலொ டுந்தள ராதவாய்மைப்

புந்தியி னான்மறை யோர்களேத்தும்

புகலி நிலாவிய புண்ணியனே

எந்தமை யாளுடை யீசவெம்மா

னெம்மிறை யேயிது வென்கொல்சொல்லாய்

வெந்தவெண் ணீறணிவார்மிழலை

விண்ணிழி கோயில் விரும்பியதே. 5

__________________________________________________

புண்ணியனே! தன்னொப்பார் இன்றித் தானே முதலாய பெருமானே! எம் தலைவனே! மேகங்கள் தோயும் மதில்கள் சூழ்ந்த திருவீழிமிழலையில் விண்ணிழி விமானக் கோயிலை விரும்பியது ஏன்! சொல்வாயாக.

கு-ரை: புண்ணியனே! எம் இறையே! விண்ணிழிகோயில் விரும்பியது என் கொல் சொல்லாய் எனக் கூட்டுக. நாகபணம் - பாம்பின் படம். அல்குலையும், நன்னுதலையும், மான்விழியையும் உடைய மங்கை எனக்கூட்டுக. பூகவனம் - கமுகந்தோட்டம். புகலி - சீகாழி, ஏகபெருந்தகை - பெருந்தகுதியால் தன்னொப்பார் பிறரின்றித் தான் ஒருவனே பெருந்தகையானவன். பெம்மான் - பெருமான் என்பதன் திரிபு. உரிஞ்சு - தோய்ந்த.

5. பொ-ரை: சந்தனக் குழம்பு பூசிய பெரிதான தனங்களை உடைய உமையம்மையோடு, உண்மையில் தவறாத புத்தியினை உடைய நான்மறை அந்தணர்கள் போற்றும் புகலியில் விளங்கும் புண்ணியனே! எம்மை அநாதியாகவே ஆளாய்க் கொண்டுள்ள ஈசனே! எம் தலைவனே! எமக்குக் கடவுளே! வெந்த திருவெண்ணீற்றை அணிந்த அடியவர் வாழும் திருவீழிமிழலையுள் விண்ணிழி கோயிலை நீ விரும்புதற்குக் காரணம் என்னையோ? சொல்வாயாக!

கு-ரை: தளராத வாய்மைப் புந்தியின் நான்மறையோர்கள் - வேதங்களைப் பலகாலும் பயின்றதால் உண்மையினின்றும் தளராத