39. சங்கொளி
யிப்பி சுறாமகரந்
தாங்கி நிரந்து
தரங்கமேன்மேற்
பொங்கொலி
நீர்சுமந் தோங்குசெம்மைப்
புகலி நிலாவிய
புண்ணியனே
எங்கள்பி ரானிமை
யோர்கள்பெம்மா
னெம்மிறை யேயிது
வென்கொல்சொல்லாய்
வெங்கதிர்
தோய்பொழில் சூழ்மிழலை
விண்ணிழி
கோயில் விரும்பியதே. 6
_________________________________________________
புத்தியினையுடைய
மறையோர்கள். சந்து அளறு - சந்தனச்சேறு.
தையலாரோடும்
மறையோர்கள் ஏத்தும் எனச் சிறப்பித்தது மனந்
தளர்தற்கேது இருந்தும் தளராத பொறிவாயில்
ஐந்தவித்த புண்ணியர் எனத்தெரிவித்தவாறு. வெந்த
வெண்ணீறு - இனி வேகுதற்கில்லாத - மாற்றமில்லாது,
ஒருபடித்தான வெண்ணீறு.
எந்தமையாளுடையீச -
எம்மை அநாதியே வழிவழியாளாக் கொண்ட தலைவ.
ஈசன் - செல்வமுடையவன். எம்மான் - எமக்கெல்லாம்
பெரியோய். இறை - தங்குதலையுடையவன். அணிவார்
என்றது அடியார்களை.
6. பொ-ரை: ஒளி உடைய
சங்கு, முத்துச் சிப்பிகள், சுறா, மகரம் ஆகிய
மீன்கள், ஆகிய இவற்றைத் தாங்கி வரிசை
வரிசையாய் வரும் கடல் அலைகளால் மேலும் மேலும்
பொங்கும் ஒலியோடு கூடிய ஓதநீர் ஓங்கும்
செம்மையான புகலியில் விளங்கும் புண்ணியனே!
எங்கள் தலைவனே! இமையோர் பெருமானே! எம் கடவுளே!
கதிரவன் தோயும் பொழில்களாற் சூழப்பெற்ற
விண்ணிழி கோயிலை விரும்பியதற்குக் காரணம்
என்னையோ! சொல்வாயாக!
கு-ரை: காழிக்குள்ள
பெருமை கடலோதத்தில் தாழாது ஓங்கியிருப்பது
என்றது முதலிரண்டடிகளான் உணர்த்தப் பெறுகின்றது.
நிரந்து -
வரிசையாய். தரங்கம் - அலை. பிரான் -
வள்ளன்மையுடையவன். பெம்மான் - பெருமான் என்பதன்
திரிபு. வெங்கதிர் - சூரியன்.
|