பக்கம் எண் :

294திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


இலங்கெரி யேந்திநின் றெல்லியாடு

மெம்மிறை யேயிது வென்கொல்சொல்லாய்

விலங்கலொண் மாளிகை சூழ்மிழலை

விண்ணிழி கோயில் விரும்பியதே. 8

42. செறிமுள ரித்தவி சேறியாறுஞ்

செற்றதில் வீற்றிருந் தானுமற்றைப்

பொறியர வத்தணை யானுங்காணாப்

புகலி நிலாவிய புண்ணியனே

எறிமழு வோடிள மான்கையின்றி

யிருந்தபி ரானிது வென்கொல்சொல்லாய்

வெறிகமழ் பூம்பொழில் சூழ்மிழலை

விண்ணிழி கோயில் விரும்பியதே. 9

__________________________________________________

ஐம்புல இன்பங்களைக் கடந்தவர்களாகிய துறவியர் போற்ற, அழகிய தண்மையான புகலியில் விளங்கும் புண்ணியனே! விளங்கும் தீப்பிழம்பைக் கையில் ஏந்தி இரவில் இடுகாட்டில் ஆடும் எம் தலைவனே! மலை போன்ற ஒளி பொருந்திய மாளிகைகளால் சூழப் பெற்ற திருவீழிமிழலையில் விண்ணிழி கோயிலை விரும்பியதற்குக் காரணம் என்னையோ! சொல்வாயாக.

கு-ரை: புலங்களை வெல்லாத இராவணனை யலறச் செய்து, புலன்களை வென்றவர்கள் போற்ற இருக்கும் புகலியான் என நயந்தோன்றக் கூறியவாறு, இற்று - ஒடிந்து, விரல் ஒற்றி - காற்பெருவிரலால் சிறிது ஊன்றி. புலன் களை கட்டவர் - புலன்களாகிற களைகளைக் களைந்தவர். எல்லி - இரவு. விலங்கல் - மலை.

9. பொ-ரை: மணம் செறிந்த தாமரைத் தவிசில் அறுவகைக் குற்றங்களையும் விலக்கி ஏறி அதில் வீற்றிருக்கும் நான்முகனும், புள்ளிகளையுடைய பாம்பினைப் படுக்கையாகக் கொண்ட திருமாலும் காண இயலாதவனாய்ப் புகலியில் விளங்கும் புண்ணியனே! பகைவரைக் கொல்லும் மழுவாயுதத்தோடு இளமான் ஆகியன கையின்கண் இன்றி விளங்கும் பெருமானே! மணம் கமழும் அழகிய பொழில்களால் சூழப்பெற்ற திருவீழிமிழலையில் விண்ணிழி கோயிலை விரும்பியதற்குக் காரணம் என்னையோ! சொல்வாயாக.