பக்கம் எண் :

 4. திருப்புகலியும் திருவீழிமிழலையும்295


43. பத்தர்க ணம்பணிந் தேத்தவாய்த்த

பான்மைய தன்றியும் பல்சமணும்

புத்தரு நின்றலர் தூற்றவந்தண்

புகலி நிலாவிய புண்ணியனே

எத்தவத் தோர்க்குமி லக்காய்நின்ற

வெம்பெரு மானிது வென்கொல்சொல்லாய்

வித்தகர் வாழ்பொழில் சூழ்மிழலை

விண்ணிழி கோயில் விரும்பியதே. 10

__________________________________________________

கு-ரை: முளரித் தவிசு - தாமரையாசனம்; (பதுமாசனம் என்னும் யோகாசனமுமாம்) ஆறும் செற்று - காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாற்சரியம் என்னும் உட்பகை ஆறையும் அழித்து. அதில் வீற்றிருந்தான் - அந்தத் தாமரையில் வீற்றிருந்த பிரமன். பொறி அரவம் - படப்பொறிகளோடு கூடிய ஆதிசேடன். அணையான் என்றது திருமாலை.

குருவருள்: "எறிமழுவோடிள மான் கையின்றி இருந்த பிரான்" என்றதனால் தனக்குத் திருவீழிமிழலையில் அருள் செய்த பெருமான் மழு ஆயுதமும் மானும் கைகளில் இல்லாமல் சீகாழித் திருத்தோணி மலையில் வீற்றிருந்தருளும் உமாமகேசுரர் என்பதைக் குறித்தருள்கின்றார் ஞானசம்பந்தர். அங்ஙனம் உள்ள காழிக் கோலத்தை வீழியிலும் காட்டியது என்னே என்று வியந்து பாடுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.

10. பொ-ரை: தன்னிடம் பத்திமையுடையோர் பணிந்து போற்றும் பான்மையோடுகூடச் சமணரும், புத்தரும் அலர் தூற்ற, அழகிய குளிர்ந்த புகலியின்கண் விளங்கும் புண்ணியனே! எவ்வகையான தவத்தை மேற்கொண்டோரும் அடைதற்குரிய இலக்காய் நின்ற எம்பெருமானே! சதுரப்பாடுடைய அறிஞர்கள் வாழும் பொழில்கள் சூழ்ந்த திருவீழிமிழலையில் விண்ணிழி கோயிலை விரும்பியதற்குக் காரணம் என்னையோ! சொல்வாயாக.

கு-ரை: பத்தர்கணம் ஏத்த வாய்த்த பான்மையது அன்றியும் - அடியார்கள் தோத்திரிக்கப் பொருந்தியதோடல்லாமல். புறச்சமயத்தார் அலர் தூற்றவும் நிலவிய புண்ணியன் என்க. எத்தவத்தோர்க்கும் - ஹடயோகம், சிவயோகம் ஆகிய எத்தகைய தவத்தினை