பக்கம் எண் :

296திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


44. விண்ணிழி கோயில் விரும்பிமேவும்

வித்தக மென்கொ லிதென்றுசொல்லிப்

புண்ணிய னைப்புக லிந்நிலாவு

பூங்கொடி யோடிருந் தானைப்போற்றி

நண்ணிய கீர்த்தி நலங்கொள்கேள்வி

நான்மறை ஞானசம் பந்தன்சொன்ன

பண்ணியல் பாடல்வல் லார்களிந்தப்

பாரொடு விண்பரி பாலகரே. 11

திருச்சிற்றம்பலம்

_______________________________________

யுடையவர்க்கும், இலக்காய் - அவரவர் நிலைக் கேற்பக் குறித்துணரத் தக்க பொருளாய், வித்தகர் - சதுரப் பாடுடையவர்கள்; ஞானிகள்.

11. பொ-ரை: விண்ணிழி கோயில் விரும்பிய புண்ணியனைப் போற்றி ஞானசம்பந்தன் சொன்ன பாடல் வல்லார்கள் பாரொடு விண்ணகத்தையும் பரிபாலனம் புரிவர்.

புகலிப் பதியில் விளங்கும் புண்ணியனாய், அழகிய இளங்கொடி போன்ற உமையம்மையோடு விளங்குவானைத் துதித்துத் திருவீழிமிழலையில் விண்ணிழி கோயிலை விரும்பிய வித்தகம் என்னையோ சொல்லாய் என்று கேட்டுப் புகழால் மிக்கவனும் நலம்தரும் நூற்கேள்வி உடையவனும் நான்மறை வல்லவனும் ஆகிய ஞானசம்பந்தன் பாடிய பண்ணிறைந்த இப்பதிகத் திருப்பாடல்களை ஓதுபவர் நிலவுலகத்தோடு விண்ணுலகத்தையும் ஆளும் சிறப்புடையவராவர்.

கு-ரை: நண்ணிய கீர்த்தி நலங்கொள் கேள்வி நான்மறை ஞானசம்பந்தன் எனத் தன்னை வியந்ததாமோ எனின்; அன்று. ஞானசம்பந்தப் பிள்ளையார் இறைவனருள் வழிநின்று, தன் வசமற்று அவனுரை தனதுரையாகப் பாடிய பாடல்களாதலின் இது அவனுரை. ஆதலின் தன்னை வியந்து தான் கூறியதன்று. பாரொடு விண் என்ற ஒடு உயர்பின் வழித்தாய், பார் கன்ம பூமியாய் வீட்டிற்கு வாயிலாகும் சிறப்புடைமையின் சேர்க்கப் பெற்றது.