* * * * * * * * * * 2
46. திரைகளெல்
லாமல ருஞ்சுமந்து
செழுமணி முத்தொடு
பொன்வரன்றிக்
கரைகளெல் லாமணி
சேர்ந்துரிஞ்சிக்
காவிரி கால்பொரு
காட்டுப்பள்ளி
உரைகளெல் லாமுணர்
வெய்திநல்ல
வுத்தம ராயுயர்ந்
தாருலகில்
அரவமெல் லாமரை
யார்த்தசெல்வர்க்
காட்செய வல்ல
லறுக்கலாமே. 3
__________________________________________________
தனது மெய்யின்
இடப்பாகமாகக் கொண்டு (அரியர்த்தர்,
அர்த்தநாரீசுரர்) விளங்கும் இறைவன் மீது
பற்றுக்கொண்டு ஏனைய பற்றுக்களை விட்டவர்,
வீட்டுலகை அடைவர்.
கு-ரை: இது, ஆரணிய
சுந்தரரைத் தியானித்து நெகிழ்ந்த
மனத்தடியவர்கள் மேலுலகடைவர் என்கின்றது. செய் -
வயல். வயலருகே நீர்பாய (அதனாற் களித்த)
கயல்மீன் ஓங்கிப்பாய, சிலவாகிய
மலர்களிலிருந்து தேன், காடெல்லாம்கமழும்
காட்டுப்பள்ளி எனவும், கைக்கெட்டுந்தூரத்தில்
வாழை, கனிகளை யீன்று கமழ்கின்ற காட்டுப்பள்ளி
எனவும் கூட்டிப் பொருள் கொள்க.
பையருகுஅழல்வாய்ப்பாம்பு அணையான் -
விஷப்பையினருகே அழலுந்தன்மை வாய்ந்த கூரிய
விஷப்பற்களையுடைய பாம்பை (ஆதிசேடனை)
அணையாகக்கொண்ட திருமால்(போல). உள்கி,
விண்டவர் மேலுலகு ஏறுவர் என முடிக்க. திருமால்
பாம்பணை மேலிருந்து ஆனந்தத் தாண்டவத்தைத்
தியானித்து மனம் நெகிழ்ந்தார் ஆதலின்,
அவ்வரலாற்றை உட்கொண்டு கூறியதாம். பணை -
மூங்கில். மெய்யருகே - மெய்யில்.
2. * * * * * *
3. பொ-ரை:
காவிரியின் வாய்க்கால்கள் எல்லா மலர்களையும்
சுமந்தும், செழுமையான மணிகள் முத்துக்கள் பொன்
ஆகியவற்றை
|