47. தோலுடை
யான்வண்ணப் போர்வையினான்
சுண்ண வெண்ணீறு
துதைந்திலங்கு
நூலுடை யானிமை
யோர்பெருமான்
நுண்ணறி வால்வழி
பாடுசெய்யுங்
காலுடை யான்கரி
தாயகண்டன்
காதலிக் கப்படுங்
காட்டுப்பள்ளி
மேலுடை யானிமை
யாதமுக்கண்
மின்னிடை
யாளொடும் வேண்டினானே. 4
__________________________________________________
வாரிக் கொண்டும்
வந்து இருகரைகளிலும் அழகு பொருந்த உராய்ந்து வளம்
சேர்க்கும் திருக்காட்டுப்பள்ளியுள் பாம்புகளை
இடையில் கட்டிய செல்வராய் எழுந்தருளியிருக்கும்
சிவபிரானுக்கு, வேதம் முதலான மேம்பட்ட உரைகள்
யாவற்றையும் உணர்ந்த நல்ல உத்தமராய்த் தொண்டு
செய்யின் அல்லல் அறுக்கலாம்.
கு-ரை: இது இறைவற்கு
ஆட்செய்யின் அல்லல் அறுக்கலாம் என்கிறது.
காவிரி கால் திரைகள் எல்லாமலருஞ்சுமந்து, மணி
முத்தொடு பொன்வரன்றி, கரைகள் எல்லாம்
அணிசேர்ந்து உரிஞ்சி பொருகாட்டுப்பள்ளி என
இயைத்து, காவிரியாற்றின் வாய்க்கால்களின்
அலைகள் எல்லா வகையான மலரையும் சுமந்து
மணிகளையும் முத்துக்களையும் பொன்னையும்
வாரிக்கொண்டு, இரு கரைகளிலும் அழகு பொருந்த
மோதிப் பொருதற்கு இடமாகிய காட்டுப்பள்ளி எனப்
பொருள்கொள்க. உரைகள் எல்லாம் உணர் வெய்தி -
வேதங்கள் யாவற்றையும் உணர்ந்து. நல்ல
உத்தமராய் உலகில் உயர்ந்தார் செல்வர்க்கு
ஆட்செய அல்லல் அறுக்கலாம் எனக்கூட்டுக.
4. பொ-ரை:
புலித்தோலை ஆடையாக உடுத்தவன். யானைத் தோலை
அழகிய போர்வையாகப் போர்த்தவன்.
திருவெண்ணீறாகிய கண்ணத்தில் செறிந்து
விளங்கும் பூணூலை மார்பகத்தே உடையவன்.
தேவர்கட்குத் தலைவன். பதிஞானத் தாலே
அன்பர்கள் வழிபாடு செய்யும் திருவடிகளை உடையவன்.
கரிய கண்டத்தை உடையவன். பலராலும் விரும்பப்
பெறும் திருக்காட்டுப்பள்ளியில் இமையாத
|