48. சலசல சந்தகி
லோடுமுந்திச்
சந்தன மேகரை
சார்த்தியெங்கும்
பலபல வாய்த்தலை
யார்த்துமண்டிப்
பாய்ந்திழி
காவிரிப் பாங்கரின்வாய்க்
கலகல நின்றதி
ருங்கழலான்
காதலிக் கப்படுங்
காட்டுப்பள்ளிச்
சொலவல
தொண்டர்க ளேத்தநின்ற
சூலம்வல் லான்கழல்
சொல்லுவோமே. 5
__________________________________________________
மூன்றாவது கண்ணை
நெற்றியில் உடைய அவ்விறைவன் மின்னல் போன்ற
இடையினை உடைய உமையம்மையோடு விரும்பி
எழுந்தருளியுள்ளான்.
கு-ரை: இது இறைவன்
உமையாளோடு காட்டுப்பள்ளியை விரும்பி மேவினான்
என்கின்றது. வண்ணப்போர்வை - அழகிய போர்வை,
துதைந்து - செறிந்து, நுண்ணறிவால் வழிபாடு செய்யும்
காலுடையான் - சிவஞானத்தால் அருளே வடிவாகக்
கொண்டு வழிபடும் திருவடியை உடையவன். நுண்ணறிவால்
வழிபடாதவர்க்குத் திருவடி அருளாகக்
காட்சியளிக்காது என்பது வெளிப்படை. நுண்ணறிவு -
மெய்யறிவு.
5. பொ-ரை: சலசல
என்னும் ஒலிக் குறிப்போடு சந்தனம் அகில்
முதலியவற்றை அடித்துவந்து, சந்தனத்தைக் கரையில்
சேர்த்துப் பற்பல வாய்க்கால்களின் தலைப்பில்
ஆரவாரித்து ஓடிப் பாய்ந்து வயல்களில் இழிந்து
வளம் சேர்க்கும் காவிரியின் தென்பாங்கரில்
சலசல என்னும் ஓசையோடு அதிரும் கழல்களை அணிந்த
இறைவனால் விரும்பப்படும் திருக்காட்டுப்பள்ளியை
அடைந்து இறைவனது பொருள்சேர் புகழ் பேசும்
தொண்டர்களால் துதிக்கப்படும் அச் சூல பாணியின்
திருவடிப் பெருமையை நாமும் கூறித்
தோத்திரிப்போம்.
கு-ரை: இது
காட்டுப்பள்ளியுள் தொண்டர்கள் துதிக்க இருந்த
பெருமான் கழல்களைத் தோத்திரிப்போம்
என்கின்றது. சலசல கலகல - ஒலிக்குறிப்பு, சந்து -
சந்தனம், உந்தி - செலுத்தி. வாய்த்தலை -
|