பக்கம் எண் :

 5. கீழைத்திருக்காட்டுப்பள்ளி301


49. தளையவிழ் தண்ணிற நீலநெய்தல்

தாமரை செங்கழு நீருமெல்லாங்

களையவி ழுங்குழ லார்கடியக்

காதலிக் கப்படுங் காட்டுப்பள்ளித்

துளைபயி லுங்குழ லியாழ்முரலத்

துன்னிய வின்னிசை யாற்றுதைந்த

அளைபயில் பாம்பரை யார்த்தசெல்வர்க்

காட்செய வல்ல லறுக்கலாமே. 6

50. முடிகையி னாற்றொடு மோட்டுழவர்

முன்கைத் தருக்கைக் கரும்பின்கட்டி

கடிகையி னாலெறி காட்டுப்பள்ளி

காதல்செய் தான்கரி தாயகண்டன்

__________________________________________________

வாய்க்காலின் தலைப்புக்கள். ஆர்த்து - ஒலித்து, கழலான் - கழலானாய சிவபெருமான்.

6. பொ-ரை: கட்டவிழ்ந்த குளிர்ந்த நிறத்துடன்கூடிய நீலோற்பலம், நெய்தல், தாமரை, செங்கழுநீர் ஆகிய எல்லா மலர்களையும், அவிழ்ந்து, விழும் கூந்தலை உடைய உழத்தியர் களைகளாய்ப் பிடுங்கி எறியும் வளம் உடையதும், பலராலும் விரும்பப்படுவதும் ஆகிய திருக்காட்டுப்பள்ளியில் துளைகளால் ஓசை பயிலப் பெறும் புல்லாங்குழல் யாழ் ஆகியன இடைவிடாமல் ஒலிக்கும் இன்னிசை முழக்கோடு வளையினின்றும் பிரியாத பாம்புகளை இடையிற் கட்டி எழுந்தருளிய செல்வராகிய பெருமானுக்கு ஆளாய்த் தொண்டு. செய்யின் அல்லல் அறுக்கலாம்.

கு-ரை: இதுவும் ஆரண்ய சுந்தரர்க்கு ஆட்செய அல்லல் அறுக்கலாம் என்கிறது. தளை - இதழ்களின்கட்டு. நீலம் முதலிய நீர்ப்பூக்களை, அவிழுங் கூந்தலையுடைய கடைசியர்கள் களையாகப் பிடுங்கி எறிகின்றார்கள். குழலார் களை கடிய எனக்கூட்டுக. துதைந்த ஆர்த்த செல்வர் எனக்கூட்டுக.

7. பொ-ரை: நாற்று முடியைக் கையால் பறிக்கும் வலிய உழவர்கள் தங்கள் முன்கைத் தினவை வெல்லக்கட்டியை உடைப்ப