பொடியணி மேனியி
னானையுள்கிப்
போதொடு
நீர்சுமந் தேத்திமுன்னின்
றடிகையினாற்றொழ
வல்லதொண்ட
ரருவினை யைத்துரந்
தாட்செய்வாரே. 7
51. பிறையுடை
யான்பெரி யோர்கள்பெம்மான்
பெய்கழ னாடொறும்
பேணியேத்த
மறையுடை யான்மழு
வாளுடையான்
வார்தரு மால்கடல்
நஞ்சமுண்ட
கறையுடை யான்கன
லாடுகண்ணாற்
காமனைக்
காய்ந்தவன் காட்டுப்பள்ளிக்
குறையுடை யான்குறட்
பூதச்செல்வன்
குரைகழ லேகைகள்
கூப்பினோமே. 8
__________________________________________________
தால் போக்கிக்
கொள்கின்ற திருக்காட்டுப்பள்ளியை விரும்பி
உறை பவனும், கரிதான கண்டமுடையவனும், திருநீறணிந்த
மேனியனும் ஆகிய பெருமானை நினைந்து அபிடேகநீர்
மலர்கள் ஆகியவற்றை எடுத்துச் சென்று துதித்து
முன்நின்று அவன் திருவடிகளைக் கையால் தொழ வல்ல
தொண்டர்கள் நீக்குதற்கு அரிய வினைகளினின்றும்
நீங்கி அவ்விறைவனுக்கு ஆட்செய்வர்.
கு-ரை: இது பூவும்
நீருங்கொண்டு பூசித்துத் தொழும் தொண்டர்கள்
வினைநீங்கி ஆட்செய்வர் என்கின்றது. முடி -
நாற்றுமுடி. தொடும் - பறிக்கின்ற, மோட்டுழவர் -
வலிய உழவர்கள், மணிக்கட்டின் வலியை
வெல்லக்கட்டியை உடைப்பதால் போக்குகின்ற
காட்டுப்பள்ளி என்க. கரிதாயகண்டன் என்றதிலுள்ள
ஆக்கப் பெயரெச்சம் கருமை இயற்கையன்மையை
உணர்த்தியது. அருவினை - இறைவனருள் ஒன்றாலன்றி
வேறு எவற்றாலும் நீங்காத ஆகாமிய சஞ்சித
வினைகள். எனவே இறைவற்கு ஆட்செய்யவும்
வினைநீக்கம் வேண்டும் என்பது வலியுறுத்தியவாறு.
8. பொ-ரை: தலையில்
பிறையை அணிந்தவனும், பெரியோர்கள், தலைவனும்,
வேதங்களை அருளியவனும் மழுவாகிய
|