பக்கம் எண் :

 5. கீழைத்திருக்காட்டுப்பள்ளி303


52. செற்றவர் தம்மர ணம்மவற்றைச்

செவ்வழல் வாயெரி யூட்டிநின்றுங்

கற்றவர் தாந்தொழு தேத்தநின்றான்

காதலிக் கப்படுங் காட்டுப்பள்ளி

உற்றவர் தாமுணர் வெய்திநல்ல

வும்பருள் ளார்தொழு தேத்தநின்ற

பெற்றம ரும்பெரு மானையல்லாற்

பேசுவதும் மற்றொர் பேச்சிலோமே. 9

_____________________________________________

வாளை உடையவனும், நீண்ட கரிய கடலிடையே தோன்றிய நஞ்சினை உண்ட கறைக் கண்டனும், கலை சேர்ந்த நுதல்விழியால் காமனைக் காய்ந்தவனும், அன்பர்களின் குறைகளைக் கேட்டறிபவனும், குறட்பூதச் செல்வனுமாகிய, திருக்காட்டுப் பள்ளியில் உள்ள இறைவன் திருவடிகளை நாள்தோறும் விரும்பி ஏத்தி அத்திரு வடிகளையே கை கூப்பினோம்.

கு-ரை: இது ஆரண்யசுந்தரரின் அடிகளைக் கைகூப்பி வணங்கினோம் என்கிறது. பிறை - முதற்பிறை. வார்தரு - ஒழுகுகின்ற, மால்கடல் - மால் துயிலுகின்ற கடலாகிற பாற்கடல். கறை - களங்கம். கனலாடு கண்ணால் - நெற்றிக்கண்ணால். காட்டுப் பள்ளிக் குறையுடையான் - காட்டுப்பள்ளியில் நேர்த்திக் குறையை நிறைவித்தலையுடையவன். குறள் - குறுகிய.

9. பொ-ரை: தேவர்க்குப் பகைவராய திரிபுரத்து அசுரர் தம் அரணங்களைச் செவ்வழலால் எரியூட்டி அழித்துப் பெருவீரத்தோடு கற்றவர்கள் தொழுதேத்த மேம்பட்டு, விளங்கும் இறைவனால் காதலிக்கப்படும் திருக்காட்டுப்பள்ளியை அடைந்து, மெய்யுணர்வு பெற்ற தேவர்கள் பலரும் தொழுது ஏத்தும், விடைமீது ஏறி அமரும் அப்பெருமான் புகழல்லால் மற்றோர் பேச்சைப் பேசுவதிலோம்.

கு-ரை: இது நாம் ஆரண்யசுந்தரரைப்பற்றியன்றி வேறொன்றையும் பற்றிப் பேசோம் என்கின்றது. செற்றவர் - பகைவர், அரணம் - கோட்டை, உற்றவர்தாம் - மலபரிபாகம் உற்ற ஆன்மாக்கள். உணர்வு