56. நெய்தவழ்
மூவெரி காவலோம்பும்
நேர்புரி நூன்மறை
யாளரேத்த
மைதவழ் மாட
மலிந்தவீதி
மருகல் நிலாவிய
மைந்தசொல்லாய்
செய்தவ நான்மறை
யோர்களேத்துஞ்
சீர்கொள்செங்
காட்டங் குடியதனுள்
கைதவழ் கூரெரி
யேந்தியாடுங்
கணபதி யீச்சரங்
காமுறவே. 2
__________________________________________________
வணங்க,
வானமண்டலத்திலுள்ள சந்திரன் தவழ்ந்து
செல்லுதற்கு இடமாய் உயர்ந்து விளங்கும்
மாடவீதிகளை உடைய திருமருகலில் எழுந்தருளியுள்ள
இறைவனே! செங்கயல்கள் நிறைந்த புனல் சூழ்ந்ததும்,
செல்வ வளம் நிறைந்ததுமான புகழார்ந்த
திருச்செங்காட்டங்குடியில் எரியைக்கையில்
ஏந்தி நள்ளிருளில் நட்டம் ஆடுதற்கு இடமாய்க்
கணபதியீச்சரத்தைக் காமுறுதல் ஏன்? சொல்வாயாக.
கு-ரை: அங்கம் -
வேதத்தின் அங்கங்களாகிய நிருத்தம், சிட்சை,
கற்பம், சந்தஸ், வியாகரணம், ஜோதிஷம் என்ற ஆறு.
மங்குல்மதி - வானமண்டலத்துச் சந்திரன், அந்தணர்
அடிபரவ மருகல் நிலாவிய மைந்த! கணபதியீச்சரம்
காமுறவு சொல்லாய் என இயைக்க. கங்குல் -
அர்த்தயாமம். எரி - திருக்கரத்திலுள்ள தீ.
2. பொ-ரை: அவியாக
அளிக்கப் பெறும் நெய் தவழ்ந்து எரியும்
முத்தீயைப் பாதுகாப்பாக ஓம்பி வரும்
நேர்மையாளரும், முப்புரி நூல் அணிந்த வேத
வித்துக்களும் ஆகிய அந்தணர் ஏத்த, கரிய
மேகங்கள் தவழும் மாட வீடுகள் நிறைந்த வீதிகளை
உடைய திருமருகலில் எழுந்தருளிய இறைவனே! தவங்கள்
பலவும் செய்யும் நான்மறையோர் போற்றும் புகழ்
பொருந்திய திருச்செங்காட்டங்குடியில்,
திருக்கரத்தில் மிக்க தீயை ஏந்தி ஆடுதற்கு
இடமாய்க் கணபதி யீச்சரத்தைக் காமுறக் காரணம்
என்ன? சொல்வாயாக.
கு-ரை:
அக்கினிகாரியம் செய்யும் அந்தணர்கள் வழிபடும்
மருகல் என்றும், தவமுதியோர்களாகிய மறையோர்
போற்றும் செங்காட்டங்குடி என்றும்
இரண்டினியல்பும் ஒத்தமை உரைக்கப் பெறுகின்றது.
மூஎரி - ஆகவனீயம்,
காருகபத்யம், தக்ஷிணாக்கினி என்ற முத்தீ.
அந்தணர்கள் மணக்காலத்து எடுத்த தீயை அவியாதே
பாது
|