பக்கம் எண் :

 6. திருமருகலும் திருச்செங்காட்டங்குடியும்307


6. திருமருகலும் திருச்செங்காட்டங்குடியும்

பதிக வரலாறு:

திருஞானசம்பந்தப் பெருமான் வணிகனது விடந்தீர்த்து அவனுக்கு மணவாழ்வு வகுத்துத் திருமருகலில் எழுந்தருளியிருந்தார்கள். அப்போது சிறுத்தொண்ட நாயனார் வந்து மீட்டும் தமது ஊருக்கு வரவேண்டும் என விண்ணப்பித்தார். பிள்ளையார் மற்ற தலங்களையும் சென்று வழிபட வேண்டும் என்ற திருவுள்ளக் குறிப்போடு மருகலானடியைப் போற்றத் திருக்கோயிலுள் சென்றார்கள். அப்போது மருகற்பெருமான் திருச்செங்காட்டங்குடிக் கணபதியீச்சரத்திலுள்ள திருவோலக்கத்தைக் காட்டியருள இப்பதிகத்தைப் பாடினார்கள். இங்கேயே அக்கோலத்தைக் காட்டியருளிய உள்ளக் குறிப்பை உணர்த்திச் சிறுத்தொண்டர்க்கு விடை கொடுத்தனுப்பினார்கள்.

இப்பதிகம் திருமருகற்பெருமானைக் கணபதியீச்சரங் காமுறக் காரணம் என்ன? என்று வினாவுவதாக அமைந்தமையின் வினாவுரையாயிற்று.

வினாவுரை
பண்: நட்டபாடை

பதிக எண்: 6

திருச்சிற்றம்பலம்

55. அங்கமும் வேதமும் ஓதும்நாவர்

அந்தணர் நாளும் அடிபரவ

மங்குன் மதிதவழ் மாடவீதி

மருகல் நிலாவிய மைந்தசொல்லாய்

செங்கய லார்புனற் செல்வமல்கு

சீர்கொள்செங் காட்டங் குடியதனுள்

கங்குல் விளங்கெரி யேந்தியாடுங்

கணபதி யீச்சரங் காமுறவே. 1

__________________________________________________

1. பொ-ரை: நான்கு வேதங்களையும் ஆறு அங்கங்களையும் ஓதும் நாவினராகிய அந்தணர்கள் நாள்தோறும் தன் திருவடிகளை