சேது புராணம்
சங்கமணிக் குழைதயங்கத்
தழைந்த காதும்
தனிவிடையு முதலபல
தணப்பில் காட்சி
பொங்குமடை
யாளங்கள் புகன்று போற்றிப்
பொருவிறந்த பரஞ்சுடரைப்
புந்திக் கெட்டா
அங்கணனை வழுதியுடல்
வெப்பு நீங்க
அணிதிகழ்வெண்
டிருநுண்தூள் அள்ளிச் சாத்தும்
செங்கைவிரல்
கொடுகுறித்துத் தெரிக்குந் தோன்றல்
சிற்றடியின்
பெருந்தகைமை சிந்தை செய்வாம்.
-
நிரம்ப அழகிய தேசிகர்.
இலிங்க புராணம்
என்புவார் குழலும்
பொருகயல் விழியும்
எழில்பெறு திங்கள்வாள்
முகமும்
பொன்பிறழ் திதலை
பூத்தவெம் முலையும்
பூந்தளி ரடியும்வாய்ந்
திலங்கு
மின்புரை
மருங்குல் பெண்கொ டியாகி
மெல்லவந் தெழுந்திட
இறைதாள்
அன்பினிற்
பாடும் காழிமா முகிலின்
அடிமலர் சென்னியில்
வைப்பாம்.
- அதிவீரராம
பாண்டியன்.