54. பொன்னியல்
தாமரை நீலநெய்தல்
போதுக ளாற்பொலி
வெய்துபொய்கைக்
கன்னியர்
தாங்குடை காட்டுப்பள்ளிக்
காதல னைக்கடற்
காழியர்கோன்
துன்னிய வின்னிசை
யாற்றுதைந்து
சொல்லிய ஞானசம்
பந்தனல்ல
தன்னிசை
யாற்சொன்ன மாலைபத்துந்
தாங்கவல்
லார்புகழ் தாங்குவாரே. 11
திருச்சிற்றம்பலம்
__________________________________________________
11. பொ-ரை: திருமகள்
வாழும் தாமரை, நீலம், நெய்தல் ஆகிய மலர்களால்
பகலும் இரவும் பொலிவெய்தும் பொய்கைகளில்
கன்னிப் பெண்கள் குடைந்தாடும்
திருக்காட்டுப்பள்ளியை விரும்பும் இறைவனைக்
கடல் சூழ்ந்த காழி மாநகர்த் தலைவனாகிய
ஞானசம்பந்தன் பொருந்திய இன்னிசை கூட்டிச்
சொன்னதும், தானே தன்னிச்சையால் பாடியவும் ஆகிய
இத் திருப்பதிகப் பாடல் மாலை பத்தையும்
மனத்திடைத் தரிக்க வல்லவர் புகழ் எய்துவர்.
கு-ரை: இது
ஞானசம்பந்தன் இசையாற்சொன்ன இந்தமாலை
பத்தும் வல்லார் புகழ் எய்துவர் என இம்மைப்பயன்
கூறி, மறுமைப்பயனும் உடன்தோன்றத் தெரிவித்துத்
திருக்கடைக் காப்பு அருளிச்செய்கிறது.
பொன்னியல் தாமரை - இலக்குமி வசிக்கும் தாமரை.
தாமரை பகலில் பொலிவது; நீலமும் நெய்தலும்
இரவிற் பொலிவன; இவைகளையுடைமையால் பொய்கை
எஞ்ஞான்றும் பொலிகின்றது என்பது குறித்தவாறு,
காட்டுப்பள்ளிக் காதலன் - காட்டுப்பள்ளியில்
விருப்புடைய பெருமான், துதைந்து - செறிந்து, நல்ல
தன் இசையால் சொன்ன - நல்ல தனது மிடற்றிசையால்
அமைத்து அருளிய.
பத்துத்
திருப்பாடல்களும் கூடியே மாலையாகவும், மாலை
பத்தும் என்றது, ஒவ்வொரு திருப்பாடலுமே
தனித்தனிப் பயனுடைய
|