பக்கம் எண் :

310திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)



தேமரு பூம்பொழிற் சோலைசூழ்ந்த

சீர்கொள்செங் காட்டங் குடியதனுள்

காமரு சீர்மகிழ்ந் தெல்லியாடுங்

கணபதி யீச்சரங் காமுறவே.

59. பாடன் முழவும் விழவுமோவாப்

பன்மறை யோரவர் தாம்பரவ

மாட நெடுங்கொடி விண்டடவும்

மருகல் நிலாவிய மைந்தசொல்லாய்

சேடக மாமலர்ச் சோலைசூழ்ந்த

சீர்கொள்செங் காட்டங் குடியதனுள்

காடக மேயிட மாகவாடுங்

கணபதி யீச்சரங் காமுறவே.

__________________________________________________

செய்து வருபவர்களுமாகிய நான்மறையாளர் வழிபடச் செல்வம் மருவிய மணிக்கோயிலை உடைய மருகலில் விளங்கும் மைந்தனே! தேன் நிறைந்த அழகிய பொழில்களால் சூழப்பெற்ற சிறப்புமிக்க செங்காட்டங்குடியில் விளங்குகின்ற அழகும் பெருமையும் மிக்க கணபதியீச்சரத்தைக் காமுற்று இராப்போதில் நடனம் ஆடுதற்குக் காரணம் யாது? சொல்வாயாக.

கு-ரை: இது, அந்தணர் வேள்வி இடையறாத மருகல் நிலாவிய நீ, பொழிலும் சோலையும் சூழ்ந்த செங்காட்டங்குடியைக் காமுறுதல் ஏன் என்கின்றது. நா மரு கேள்வியர் - நாவிற் பொருந்திய வேதங்களையுடையவர். கேள்வி - வேதம் (சுருதி என்பதன் மொழி பெயர்ப்பு) மா - பெருமை, இலக்குமி. காமரு - அழகிய.

பொ-ரை: பாடலும் அதற்கிசைந்த முழவு ஒலியும், திருவிழாக்கள் ஒலியும், இடைவிடாமல் நிகழ்வதும் மாடவீடுகளில் கட்டிய கொடிகள் வானைத் தடவுவதும் ஆகிய சிறப்புக்களை உடைய திருமருகலில் வேதங்கள் பலவும் கற்ற அந்தணாளர் பரவ எழுந்தருளிய இறைவனே! உயரமான மணம் மிக்க மலர்ச் சோலைகளால் சூழப் பெற்ற சிறப்புமிக்க செங்காட்டங்குடியில், காட்டிடமே நாடக மாடுதற்கு இடமாக இருக்கவும், ஆடுதற்குரிய இடமாகக் கணபதியீச்சரத்தைக் காமுறக் காரணம் என்ன? சொல்வாயாக.