60. புனையழ
லோம்புகை யந்தணாளர்
பொன்னடி
நாடொறும் போற்றிசைப்ப
மனைகெழு மாட
மலிந்தவீதி
மருகல் நிலாவிய
மைந்தசொல்லாய்
சினைகெழு தண்வயற்
சோலைசூழ்ந்த
சீர்கொள்செங்
காட்டங் குடியதனுள்
கனைவளர் கூரெரி
யேந்தியாடுங்
கணபதி யீச்சரங்
காமுறவே. 6
__________________________________________________
கு-ரை: இது விழவறாத
மாடங்களோடுகூடிய மருகலிலுள்ள நீ, காடகமே யிடமாக
ஆடுங் கணபதியீச்சரம் காமுறல் ஏன் என்கிறது.
பாடலும், முழவும், விழாவும் இடையறாத மருகல் எனவும்,
மறையோர் பரவ நிலாவிய மைந்த எனவும், கொடி தடவு
மருகல் எனவும் இயைத்துப் பொருள் காண்க. சேடகம் -
கேடகம் போலும் வட்டமாகிய மலர். ஆடும் -
ஆடுதற்கிடமாகிய.
6. பொ-ரை:
கிரியைகள் பலவற்றாலும் அழகு செய்யப் பெற்ற
முத்தீயை வளர்க்கும் கைகளை உடைய அந்தணர்கள்,
நாள்தோறும் தன் திருவடிகளைப் போற்ற,
இல்லங்களும் விளங்கும் மாடங்களும் நிறைந்த
வீதிகளை உடைய திருமருகலில் விளங்கும் இறைவனே!
நெற்பயிர்கள் திளைத்து வளரும் தண்
வயல்களையடுத்த சோலைகளால் சூழப்பெற்ற நீர்
வளம் மிக்க செங்காட்டங்குடியில் எரியேந்திக்
கணபதியீச்சரத்தைக் காமுறக் காரணம் என்ன?
சொல்வாயாக.
கு-ரை: இது
அழலோம்பும் அந்தணர்கள் வணங்க மருகலில்
எழுந்தருளியுள்ள மைந்தனே! கணபதீயீச்சரம் காமுறல்
ஏன் என்கிறது. புனையழல் - சாதகன்மம் முதலான
பதினாறு கிரியைகளாலும் அழகு செய்யப்பெற்ற
யாகாக்கினி. பொன்னடி - பொன்போல அனைவராலும்
போற்றப்பெறுகின்ற திருவடி, இயற்கையே களிம்பற்று
ஒளிபெற்று என்றும் மங்காத பொன்னைப்போல,
இயற்கையே பாசம் இன்றி அடைந்தாரையும்
பாசங்களினீக்குகின்ற திருவருள், கல்லெறிய
விலகும் பாசி போல ஒருநாள் ஒருகால் போற்ற,
சிவஞானம் சித்திக்கும்; அந்தணர்கள் நாடோறும்
போற்றிசைப்பதால் நிலைத்த ஞானத்தை
எய்துகின்றனர் என்பதாம். உடன்பிறந்தே
கொல்லும் பகையாய், தன்னையும் காட்டாது
தலைவனையும் காட்டாது நிற்கின்ற மூலமலப்பகையை
வெல்லும் வீரனாதலின் மைந்த என்றார். மைந்து -
வலிமை, சினை - கிளை; முளையுமாம். கனை - மிகுதி.
ஓசையுமாம்.
|