பக்கம் எண் :

312திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


* * * * * * * 7

61. பூண்டங்கு மார்பி னிலங்கைவேந்தன்

பொன்னெடுந் தோள்வரை யாலடர்த்து

மாண்டங்கு நூன்மறை யோர்பரவ

மருகல் நிலாவிய மைந்தசொல்லாய்

சேண்டங்கு மாமலர்ச் சோலைசூழ்ந்த

சீர்கொள்செங் காட்டங் குடியதனுள்

காண்டங்கு தோள்பெயர்த் தெல்லியாடுங்

கணபதி யீச்சரங் காமுறவே. 8

62. அந்தமு மாதியுந் நான்முகனு

மரவணை யானு மறிவரிய

மந்திர வேதங்க ளோதுநாவர்

மருகல் நிலாவிய மைந்தசொல்லாய்

__________________________________________________

7. * * * * * *

8. பொ-ரை: கயிலை மலையைப் பெயர்க்க முற்பட்ட அணிகலன்கள் பொருந்திய மார்பினை உடைய இலங்கை மன்னன் இராவணனின் அழகிய பெரிய தோள்களை அம்மலையாலேயே அடர்த்து, மாட்சிமை பொருந்திய நான்மறையோர் பரவத் திருமருகலில் எழுந்தருளி விளங்கும் இறைவனே! வானளாவிய மணமலர்ச் சோலைகளால் சூழப்பெற்ற சீர்மிக்க செங்காட்டங்குடியில் அழகிய உன் திருத்தோள்களை அசைத்து இரவில் நடமிடுதற்கு இடனாய்க் கணபதியீச்சரத்தைக் காமுறக் காரணம் யாதோ? சொல்வாயாக.

கு-ரை: பூண் - மதாணி முதலிய மார்பணிகள், மாண் தங்கு - மாட்சிமை தங்கிய. சேண் - ஆகாயம். காண் தங்கு - அழகு தங்கப் பெற்ற. எல்லி - இரவு.

9. பொ-ரை: நான்முகனும் அரவணையானும் ஆதியாய முடியையும் அந்தமாகிய அடியையும் அறிதற்கு அரியவனாய், மந்திர வடிவான வேதங்களை ஓதும் நாவினரான அந்தணர் பரவி ஏத்தத் திருமருகலில் விளங்கும் இறைவனே! செந்தமிழ் வல்லோர் பரவித்