பக்கம் எண் :

 6. திருமருகலும் திருச்செங்காட்டங்குடியும்313


செந்தமி ழோர்கள் பரவியேத்துஞ்

சீர்கொள்செங் காட்டங் குடியதனுள்

கந்தம கிற்புகை யேகமழுங்

கணபதி யீச்சரங் காமுறவே. 9

63. இலைமரு தேயழ காகநாளும்

இடுதுவர்க் காயொடு சுக்குத்தின்னும்

நிலையமண் தேரரை நீங்கிநின்று

நீதரல் லார்தொழு மாமருகல்

மலைமக டோள்புணர் வாயருளாய்

மாசில்செங் காட்டங் குடியதனுள்

கலைமல்கு தோலுடுத் தெல்லியாடுங்

கணபதி யீச்சரங் காமுறவே. 10

__________________________________________________

துதிக்கும் சிறப்புமிக்க செங்காட்டங்குடியில் அகில் புகை மணமே கமழும் கணபதியீச்சரத்தைக் காமுறக் காரணம் யாதோ? சொல்வாயாக.

கு-ரை: அந்தம் அரவணையானும் ஆதி நான்முகனும் அறிவரிய என எதிர்நிரனிறை. அந்தம் ஆதி - அடி முடி. மந்திர வேதங்கள் - மந்திர வடிவாகிய வேதங்கள், அவை இருக்கு, வேதங்களில் இருக்கு மந்திரங்களும், யஜுர் பிரயோகங்களும், சாமம் கானங்களுமாக அமைந்தன, வேதம் ஓதும் அந்தணர்கள் விளங்கும் மருகலில் இருக்கும் இறைவன், செந்தமிழ் நூலோர் பரவியேத்தும் செங்காட்டங்குடியை விரும்பியதில் நயமிருத்தல் ஓர்க. கந்தமே கமழும் என மாற்றுக.

10. பொ-ரை: மருத மரத்து இலையின் சாற்றினால் நிறமூட்டிய ஆடைகளை அணிந்த புத்தர், கடுக்காய், சுக்கு, இவற்றைத் தின்னும் சமணர் ஆகியோரை விடுத்து, சைவர்கள் தொழத் திருமருகலில் மலைமகளோடு உறையும் மைந்தனே! குற்றமற்ற செங்காட்டங்குடியில் மான் தோலை உடுத்தி நள்ளிருளில் ஆடுதற்கு இடனாய்க் கணபதியீச்சரத்தைக் காமுறுதற்குக் காரணம் யாதோ? சொல்வாயாக.

கு-ரை: மருது இலை - மருதமரத்தின் இலை. துவர்க்காய் - கடு, பாக்கு. தேரர் - சாக்கியர். நீதர் - இழிந்தோர்; நீசர் என்பதன் போலி,