பக்கம் எண் :

332திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


85. பின்னிய தாழ்சடை யார்பிதற்றும்

பேதைய ராஞ்சமண் சாக்கியர்கள்

தன்னிய லும்முரை கொள்ளகில்லாச்

சைவ ரிடந்தள வேறுசோலைத்

துன்னிய மாதரும் மைந்தர்தாமுஞ்

சுனையிடை மூழ்கித் தொடர்ந்த சிந்தைப்

பன்னிய பாடல் பயிலுமாவூர்ப்

பசுபதி யீச்சரம் பாடுநாவே. 10

86. எண்டிசை யாரும்வ ணங்கியேத்தும்

எம்பெரு மானையெ ழில்கொளாவூர்ப்

பண்டுரி யார்சிலர் தொண்டர்போற்றும்

பசுபதி யீச்சரத் தாதிதன் மேல்

__________________________________________________

10. பொ-ரை: பின்னித் தொங்கவிடப்பட்ட சடையை உடையவராய், அறிவின்மையோடு சமணர்கள் சாக்கியர்கள் ஆகியோர் தங்களைப் பற்றியும் தாங்கள் சார்ந்த மதங்களின் சிறப்புக்களைப் பற்றியும் கூற, அவற்றை ஏலாதவராய் விளங்கும் சைவன் விரும்பி உறையும் இடம், முல்லைக் கொடி படர்ந்த சோலைகளில் மாதரும் மைந்தரும் நெருங்கிச் சுனையில் மூழ்கிச் சிவபிரானை மனம் ஒன்றிப்பாடும் ஆவூர்ப் பசுபதியீச்சரமாகும். நாவே அதனைப் பாடுவாயாக.

கு-ரை: பின்னிய தாழ் சடையார் - பின்னித் தொங்கவிடப் பெற்ற சடையை உடையவர்கள்; சமணரில் இல்லறத்தாராகிய ஆண்கள் தலையைப் பின்னித் தொங்கவிடுதல் மரபு, இன்றும் சீனமக்களிடத்துக் காணலாம். சாக்கியர் - புத்தர். தன்னியலும் உரை - தன்னைப்பற்றி அவர்கள் சொல்லும் உரைகள். உரைகொள்ள இல்லா சைவர் - அவ்வுரைகளுக்குப் பொருளாகத் தாம் ஆகாத சிவபெருமான் என்றது, சிவத்தைப்பற்றி அவர்கள் கூறும் உரைகள் சிற்றறிவினால் சொல்லப்பட்டன ஆதலின் அவற்றைக் கடந்துநின்ற இயல்பினை உடையவர் என்பதாம். தளவு - முல்லை. மாதரும் மைந்தரும் சுனையில் மூழ்கிப் புறத்தூய்மையொடு அகத்தூய்மையும் கொண்டு வழிபடு கின்றனர் என்றவாறு.

11. பொ-ரை: எட்டுத் திசையில் உள்ளவர்களும் வணங்கிப் போற்றும் எம் தலைவரும், அழகிய ஆவூரில் பழ அடியார்களால்