84. மாலு மயனும்
வணங்கிநேட
மற்றவ ருக்கெரி
யாகிநீண்ட
சீல மறிவரி
தாகிநின்ற
செம்மையி னாரவர்
சேருமூராம்
கோல விழாவி
னரங்கதேறிக்
கொடியிடை
மாதர்கள் மைந்தரோடும்
பாலென வேமொழிந்
தேத்துமாவூர்ப்
பசுபதி யீச்சரம்
பாடுநாவே. 9
__________________________________________________
மலர்களைச் சாத்தி
வழிபடும் இயல்பினதும் ஆகிய
ஆவூர்ப்பசுபதியீச்சரமாகும். நாவே அதனைப்
பாடுவாயாக.
கு-ரை: வெண்டலைமாலை
உம்மைத்தொகை; வெண்தலைகளையும் மாலைகளையும்
கலந்து அணிந்த திருமேனியுடையவர். விறல் - வலிமை.
நாளும் புதுப்பூச்சூடி, போகம் நுகர்பவனாதலின்
இராவணன்முடி வண்டமர் பூமுடி எனப்பட்டது. அதனைச்
செற்றுகந்தமைந்தர் என்பதால் வினைப்போகக்
கழிவின்கண் ஆட்கொள்ளும் இறைவன் என்பது
போதரும். சிந்தைக் கருத்து - இடைவிடாத
சிந்தனையால் எழுந்த கருத்து.
9. பொ-ரை: திருமாலும்
பிரமனும் வணங்கித் தேட, அவர்கட்குச் சோதிப்
பிழம்பாய்நீண்டு தோன்றிய, அறிதற்கு அரியராய்
விளங்கும் செம்மையராகிய சிவபிரான் எழுந்தருளிய
ஊர், அழகிய விழாக் காலங்களில் கொடியிடைப்
பெண்கள் அரங்கின்கண் ஏறி ஆடவர்களோடு கூடிப்
பால்போன்று இனிக்கும் மொழிகளால் இறைவனை
ஏத்தும் ஆவூர்ப் பசுபதியீச்சரமாகும். நாவே
அதனைப் பாடுவாயாக.
கு-ரை: நேட - தேட.
மற்று வினைமாற்றுப் பொருளில் வந்தது. சீலம் -
எளிமை; இதனைச் சௌலப்யம் என்பர் வடநூலார்.
சீலமாவது அடியார்க்கு எளியராய் இருக்கும் தன்மை.
மாலும் அயனும் தேட அவர்களுக்குச் சோதிப்
பிழம்பாய்த் தோன்றிய எளிமையை விளக்கியது.
அதனைச் சிற்றறிவுடைய ஆன்மாக்கள்
அறியமுடியாமையால் அறிவரிதாகிநின்ற என்றார்.
கோலவிழா - அழகியவிழா. மாதரும் மைந்தரும்
அரங்கேறியும் பால்போன்ற மொழியால் இறைவனை
ஏத்துகிறார்கள் என்பது, இன்பக்காலத்தும்
இறைவனையே தியானிக்கும் பெருமை விளக்கியவாறு.
|