தாறுடை வாழையிற் கூழைமந்தி
தகுகனி யுண்டுமிண் டிட்டினத்தைப்
பாறிடப்
பாய்ந்துப யிலுமாவூர்ப்
பசுபதி யீச்சரம்
பாடுநாவே. 7
83. வெண்டலை மாலை
விரவிப்பூண்ட
மெய்யுடை யார்விற
லாரரக்கன்
வண்டமர் பூமுடி
செற்றுகந்த
மைந்தரி டம்வள
மோங்கியெங்கும்
கண்டவர்
சிந்தைக் கருத்தின்மிக்கார்
கதியரு ளென்றுகை
யாரக்கூப்பிப்
பண்டலர் கொண்டு
பயிலுமாவூர்ப்
பசுபதி யீச்சரம்
பாடுநாவே. 8
__________________________________________________
ஆடை தரித்தவரும்
ஆகிய சிவபிரான், மண்ணுலக மக்கள் தம்மைப்
புகழ்ந்து போற்ற எழுந்தருளிய ஊர், குள்ளமான மந்தி
பழுத்துள்ள வாழைத் தாற்றில் உண்ணத் தகுதியான
பழங்களை வயிறார உண்டு, எஞ்சியுள்ள பழங்களை
உண்ணவரும் குரங்குகளை அஞ்சுமாறு பாய்ந்து விரட்டும்
தோட்டங்களை உடைய ஆவூர்ப் பசுபதியீச்சரமாகும்.
நாவே அதனைப் பாடுவாயாக.
கு-ரை: நீறுடையார் -
தாம் தொன்மைக்கெல்லாம் தொன்மை
யாயிருத்தலைத் தோற்றுவிக்கச்
சர்வசங்காரகாலத்துத் திருநீற்றினைத்
திருமேனியிலணிந்தவர். உள்ளம் கூறுடையார் -
உள்ளத்தில் குடி கொண்டிருப்பர், தாறிட்ட
வாழையில் தழைவால் மந்திகள் கனிந்த பழத்தை
உண்டு செருக்கி, குரங்கினத்தைக்
கலைந்தோடப்பாய்கின்ற ஆவூர் என்றதால்
நினைந்துருகும் அடியார்க்குச் சிவாநுபவ
வன்மையளிக்கும் ஆவூர் என்பது குறிப்பால் போந்த
பொருள்.
8. பொ-ரை:
வெண்மையான தலைகளை மாலையாகக் கோத்துப் பிற
மாலைகளுடன் அணிந்துள்ள திருமேனியை உடையவரும்,
வண்டுகள் மொய்க்கும் மலர்களைச் சூடிய வலிய
இராவணனின் முடியை நெரித்து மகிழ்ந்த வலியரும்
ஆகிய சிவபெருமான் எழுந்தருளியுள்ள இடம், எங்கும்
வளம் ஓங்கியதும், தரிசித்தவர்கள் சித்தத்தால்
உயர்ந்தவர்களாய்த் தமக்குக் கதியருள் என்று
கைகளைக் கூப்பிப் பழமைதொட்டுச் சிவபெருமானுக்கு
உரியனவாகிய
|