பக்கம் எண் :

 8. திரு ஆவூர்ப்பசுபதீச்சரம்329


81. குற்ற மறுத்தார் குணத்தினுள்ளார்

கும்பிடு வார்தமக் கன்புசெய்வார்

ஒற்றை விடையினர் நெற்றிக்கண்ணார்

உறைபதி யாகுஞ் செறிகொண்மாடம்

சுற்றிய வாசலின் மாதர்விழாச்

சொற்கவி பாடநி தானநல்கப்

பற்றிய கையினர் வாழுமாவூர்ப்

பசுபதி யீச்சரம் பாடுநாவே. 6

82. நீறுடை யார்நெடு மால்வணங்கு

நிமிர்சடை யார்நினை வார்தமுள்ளம்

கூறுடை யாருடை கோவணத்தார்

குவலய மேத்தவி ருந்தவூராம்

__________________________________________________

6. பொ-ரை: அடியவர் செய்யும் குற்றங்களை நீக்கியவரும், நற்குணங்களை உடையோரிடம் வாழ்பவரும், தம்மைக் கும்பிடுவார்க்கு அன்பு செய்பவரும், ஓர் எருதைத் தமக்கு ஊர்தியாகக் கொண்டவரும், பிறர்க்கில்லாத நெற்றிக் கண்ணை உடையவரும் ஆகிய சிவபிரான் உறையும் பதி, செறிந்த மாட வீடுகளைச் சார்ந்துள்ள வாசலில் விழாக் காலங்களில் பெண்கள் புகழ்ந்து கவி பாடக் கேட்டு அவ்வீடுகளில் வாழும் செல்வர்கள் பொற்காசுகள் வழங்க, அதனைப் பற்றிய கையினராய் மகளிர் மகிழ்ந்துறையும் ஆவூர்ப்பசுபதியீச்சரமாகும். நாவே அதனைத் தொழுது பாடுக.

கு-ரை: குற்றம் அறுத்தார் - அடியார்கள் செய்த குற்றங்களை நீக்கியவர். குற்றம் மறுத்தார் - நறுநாற்றத்திலன்றி தீநாற்றத்தில் செல்லாத வண்டுபோல் குற்றங்களில் சென்று பொருந்த மறுத்தவர். மாதர்கள் விழாவின்கண் சொல்லானியன்ற கவிகளைப்பாட, அதனைக்கண்ட மாந்தர்கள் பொன்னளிக்க, அதனை ஏற்ற கையர்களாய் வாழ்கின்ற ஆவூர் என்க. நிதானம் - பொன், "நிதானம் - முற்காரணம் தூய்மை நியமம் நிதி மறைத்துக்கொள் பொருள் கன்றின் கயிறாம்" என்பது நானார்த்ததீபிகை

7. பொ-ரை: திருவெண்ணீற்றை அணிந்தவரும், திருமாலால் வணங்கப் பெறுபவரும், நிமிர்த்துக் கட்டிய சடைமுடியுடையவரும், தம்மை நினைவார் உள்ளத்தில் குடி கொண்டிருப்பவரும், கோவண