பக்கம் எண் :

328திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


80. இந்தணை யுஞ்சடை யார்விடையார்

இப்பிறப் பென்னை யறுக்கவல்லார்

வந்தணைந் தின்னிசை பாடுவார்பால்

மன்னினர் மன்னி யிருந்தவூராம்

கொந்தணை யுங்குழ லார்விழவிற்

கூட்ட மிடையிடை சேரும்வீதிப்

பந்தணையும் விர லார்தமாவூர்ப்

பசுபதி யீச்சரம் பாடுநாவே. 5

__________________________________________________

உடைய மகளிர் காலாலே தாளமிட்டு ஆடித் தேர்ந்த இசையோடு பாடும் பாடல்கள் இடைவிடாது கேட்கப்படுவதுமான ஆவூர்ப்பசுபதி யீச்சரத்தை நாவே அதனைப் பாடுவாயாக.

கு-ரை: நல்குரவு என்னைநீக்கும் ஆவியர் - வறுமை புகுதாதே என்னைக் காக்கும் உயிர்போன்றவர். இதனோடு "இடரினும் தளரினும் எனதுறுநோய் தொடரினும் உனகழல் தொழுதெழுவேன்" என்று யாகத்துக்குப் பொன்வேண்டிய காலத்துப் பாடிய பாடலையும் ஒப்பிடுக. அந்தணர் - முனிவர். புரிகுழலார் சுவடு ஒற்றி - பெண்கள் காற்சுவட்டினாலே தாளமிட்டு, பாவியல் பாடல் - இசையமைந்த பாடல், பா - பரந்துபட்டுச் செல்வதோர் ஓசை.

5. பொ-ரை: திங்கள் தங்கும் சடையினரும், விடையை ஊர்தியாக உடையவரும், என்னைப் பற்றிய இப்பிறவியின் வினையை நீக்கி முத்தியளிக்க வல்லவரும், தம்மை வந்தடைந்து இன்னிசையால் பாடி வழிபடுவாரிடம் மன்னியிருப்பவரும் ஆகிய சிவபிரான், நிலைபெற்று விளங்கும் ஊர், பூங்கொத்தணிந்த கூந்தலை உடைய மங்கல மகளிர் வாழ்வதும், திருவிழாக்களில் மக்கள் கூட்டம் இடையிடையே சேரும் அகன்ற வீதிகளை உடையதும், பந்தாடும் கைவிரல்களினராகிய இளம்பெண்கள் நிறைந்ததுமாகிய ஆவூர்ப்பசுபதியீச்சரத்தை நாவே அதனைப் பாடுவாயாக.

கு-ரை: இந்து - சந்திரன்; இப்பிறப்பு அறுக்க வல்லார் என்றது என் வினை முழுவதும் உலர்ந்துபோதலின் முத்தி அளிக்கவல்லார் என்பதாம், வந்து அணைந்து - திருக்கோயிலின் திருவணுக்கன் திருவாயிலை வந்து அடைந்து. மன்னினர் - நிலை பெற்று இருப்பவர். கொந்து - பூங்கொத்து; குழலார் விரலார் என்பன மகளிரைக்குறித்து நின்றன.