தெங்குயர்
சோலைசே ராலைசாலி
திளைக்கும்
விளைவயல் சேரும்பொய்கைப்
பங்கய மங்கை
விரும்புமாவூர்ப்
பசுபதி யீச்சரம்
பாடுநாவே. 3
79. தேவியொர்
கூறின ரேறதேறுஞ்
செலவினர் நல்குர
வென்னைநீக்கும்
ஆவிய ரந்தண
ரல்லல்தீர்க்கும்
அப்பனா ரங்கே
யமர்ந்தவூராம்
பூவிய லும்பொழில்
வாசம்வீசப்
புரிகுழ லார்சுவ
டொற்றிமுற்றப்
பாவியல் பாடல
றாதவாவூர்ப்
பசுபதி யீச்சரம்
பாடுநாவே. 4
__________________________________________________
இப்பிறப்பில்
உயர்தற்குரிய சிவஞானத்தைப் பெற்றோரும்
வானவரும் துதிக்கச் சிவபிரான் எழுந்தருளிய ஊர்,
உயரமாக, வளர்ந்த தென்னஞ் சோலைகளும்,
கரும்பாலைகளும், செந்நெற்பயிர்களும் திளைத்து
விளைவுதரும் வயல்களை உடையதும், பொய்கைகள்
சூழ்ந்ததும், திருமகள் விரும்புவதுமாகிய வளம்சான்ற
ஆவூர்ப்பசுபதீயீச்சரமாகும். நாவே அதனைப்
பாடுவாயாக.
கு-ரை: பொங்கிவரும்
புனல் - கங்கை. அதுவந்த செருக்கினைக்
குறிப்பித்தபடி. போம் வழிவந்து - பிறவியினீங்கி
உய்ந்து போகக் கூடிய மனிதப்பிறவியில் வந்து.
இழிவு ஏற்றம் ஆனார் - தீயனசெய்து இழிந்தும்
நல்லன செய்து உயர்ந்தும் உய்ந்த மக்கள்.
இழிவேற்றமானாரும், ஞானத்தரும், வானோரும்
ஏத்தும் இறைவர் என்று ஒரு தொடராக்குக. தென்னஞ்
சோலைகளும் ஆலைகளும் வயல்களில் நெற்பயிர்களும்
சேரும் ஆவூர் எனவும், பங்கயமங்கை விரும்பும் ஆவூர்
எனவும் கூட்டுக. பொய்கை மானிடர் ஆக்காத நீர்
நிலை.
4. பொ-ரை:
உமாதேவியை ஒரு பாதியாக உடையவர்,
இடபவாகனத்தில் ஏறி வருபவர். வறுமை புகுதாது
என்னைக் காப்பவர். எனக்கு உயிர் போன்றவர்.
கருணையர், என்துயர் போக்குதலால் எனக்குத்
தந்தையாக விளங்குபவர். அவர் எழுந்தருளிய ஊர்,
பூக்கள் நிறைந்த பொழில்களின் வாசனை வீசுவதும்
சுருண்ட கூந்தலை
|