பக்கம் எண் :

326திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


77. முத்தியர் மூப்பில ராப்பினுள்ளார்

முக்கணர் தக்கன்றன் வேள்விசாடும்

அத்திய ரென்றென் றடியரேத்தும்

ஐயன ணங்கொ டிருந்தவூராம்

தொத்திய லும்பொழில் மாடுவண்டு

துதைந்தெங்குந் தூமதுப் பாயக்கோயிற்

பத்திமைப் பாடல றாதவாவூர்ப்

பசுபதி யீச்சரம் பாடுநாவே. 2

78. பொங்கி வரும்புனல் சென்னிவைத்தார்

போம்வழி வந்திழி வேற்றமானார்

இங்குயர் ஞானத்தர் வானோரேத்தும்

இறையவ ரென்றுமி ருந்தவூராம்

__________________________________________________

2. பொ-ரை: அடியவர்கள், முத்திச் செல்வத்தை உடையவர் என்றும், மூப்புஇலர் என்றும், மாட்டுத் தறியில் விளங்குபவர் என்றும், முக்கண்ணர் என்றும், தம்மை இகழ்ந்து செய்த தக்கனின் வேள்வியை அழித்தவர் என்றும், போற்றித் துதிக்கும் தலைவராகிய சிவபிரான் உமையம்மையாரோடு எழுந்தருளிய ஊராகிய பொழில்களில் கொத்தாக மலர்ந்த பூக்களில் வண்டுகள் தோய்தலால் எங்கும் தூயதேன்துளிகள் பாய்வதும், கோயிலில் பத்தி பூண்ட அடியவர் பாடும் பாடல் இடைவிடாது கேட்பதுமாகிய ஆவூர்ப்பசுபதியீச்சரத்தை நாவே அதனைத் தொழுது பாடுவாயாக.

கு-ரை: முத்தியர் - முத்தியின்பத்தை உடையவர். ஆப்பு - கன்றாப்பூர், வேள்விசாடும் அத்தியர் என்றது தக்கன் வேள்விக்கண் அளிக்கும் அவியை ஏற்கும் இரவலராயிருந்தும் வேள்வியை அழித்தமை சாலாது என்னும் பழிப்பு தோன்றக்கூறியது. அத்தியர் - இரவலர். ஹத்தி என்பதன் திரிபாகக்கொண்டு கொலை என்பாரும் உளர்; அது பொருந்தாமை ஓர்க. தொத்து இயலும் - பூங்கொத்துக்கள் அழகு செய்கின்ற. பத்திமைப் பாடல் - சிவபத்தியைப் பயக்கும் பாடல்கள்.

3. பொ-ரை: சினந்து வந்த கங்கையைத் தம் திருமுடியில் வைத்தவரும், பிறவி போதற்குரிய பிறப்பான மனிதப் பிறவி எடுத்து இழிவடைதற்கும் ஏற்றம் பெறுதற்கும் உரிய மக்களும் அவருள்